கள்ளக்குறிச்சி மாவட்ட 412 ஊராட்சிகளில் நாளை கிராம சபைக்கூட்டம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கள்ளக்குறிச்சி, 25 ஜனவரி (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் உள்ள 412 ஊராட்சிகளிலும் நாளை (ஜனவரி 26) குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் விடுத்துள்ள
கள்ளக்குறிச்சி மாவட்ட  412 ஊராட்சிகளில் நாளை கிராம சபைக்கூட்டம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


கள்ளக்குறிச்சி, 25 ஜனவரி (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் உள்ள 412 ஊராட்சிகளிலும் நாளை (ஜனவரி 26) குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

மாவட்டத்தில் உள்ள 412 ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தன்று வரும் (26ம் தேதி) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2026 - 27ம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சி திட்டத்திற்கு ஒப்பு தல் பெறுதல், தொழிலாளர் வரவு செலவு திட்டம் மற்றும் திட்ட பணிகள்,

நலிவு நிலை குறைப்பு நிதி, தூய்மை பாரத இயக்க திட்டம், ஜல் ஜீவன் திட்டம், சிறு பாசன ஏரிகள் புதுப்பித்தல், தொகுதி மேம்பாட்டு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.

கிராம சபை கூட்டத்தில் அந்தந்த பகுதிகளில் உள்ள தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பி னர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b