Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 25 ஜனவரி (ஹி.ச.)
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ரேடியோ மூலம் மனதின் குரல் நிகழ்ச்சியில் (மன் கி பாத்) நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
அந்த வகையில் 130-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று (ஜனவரி 25) ஒலிபரப்பானது.
இதில் அவர் பேசியதாவது:
என் அன்பான நாட்டு மக்களே வணக்கம், இது 2026ம் ஆண்டின்
முதல் மன் கி பாத் நிகழ்ச்சி நாளை ஜனவரி 26ம் தேதி நாம் அனைவரும் குடியரசு தின விழாவை கொண்டாடுவோம். நமது அரசியலமைப்பு சட்டம் இந்த நாளில் தான் நடை முறைக்கு வந்தது.
இன்று வாக்காளர் தினம், 18 வயது நிரம்பிய எனது இளம் நண்பர்கள் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்யுமாறு மீண்டும் ஒரு முறை கேட்டுக்கொள்கிறேன். இது இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும்.
இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல் அமைப்பாக மாறியுள்ளது. இன்று நமது கலாசாரமும், பண்டிகைகளும் உலகம் முழுவதும் தங்கள் முத்திரையைப் பதித்து வருகின்றன.
உலகின் ஒவ்வொரு மூலையிலும் இந்திய பண்டிகைகள் மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படுகின்றன. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் நமது கலாசாரத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்கள் எங்கிருந்தாலும், அவர்கள் தங்கள் கலாசாரத்தின் சிறம்பம்சங்களை பாதுகாத்து ஊக்குவிக்கின்றனர்.
61 மலேசியாவில் உள்ள நமது இந்திய சமூகமும் இந்த விஷயத்தில் பாராட்டத்தக்க பணிகளைச் செய்து வருகிறது. மலேசியாவில் 500க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் இருப்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சியும் ஆச்சர்யமும் அடைவீர்கள்.
தமிழ் மொழியைக் கற்பிப்பதோடு மட்டுமல்லாமல், பிற பாடங்களும் தமிழில் கற்பிக்கப்படுகின்றன. மேலும், தெலுங்கு மற்றும் பஞ்சாபியுடன், பிற இந்திய மொழிகளிலும் கற்பிக்கப்படுகிறது.
இந்தியாவிற்கும், மலேசியாவிற்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு சமூகம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் பெயர் 'மலேசியா இந்திய பாரம்பரிய சங்கம். இந்த சங்கம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாகும். இப்பொழுது தரத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரம் இது.
66 இந்த வருடம் நமது முழு பலத்துடன் தரத்திற்கு முன்னுரிமை அளிப்போம். நமது ஒரே தாரக மந்திரம் தரம், தரம், தரமாக மட்டும் இருக்க வேண்டும்.
நேற்றையதை விட இன்று சிறந்த தரமாக இருக்க வேண்டும். நாம் எவற்றை எல்லாம் தயாரிக்கிறோமோ அவற்றை தரமாக தயாரிக்க வேண்டும். இந்திய பொருட்கள் என்றால் உயர்வான தரம் என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும்.
தரத்தில் எந்த சமரசமும் செய்யக் கூடாது. இதன் மூலம் மட்டும் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய முடியும்.
இன்று, பல நகரங்களில் குப்பைக் கிடங்கு கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு குழுக்கள் செயல்படுகின்றன. சென்னையில் இதுபோன்ற ஒரு குழு சிறந்த பணிகளைச் செய்துள்ளது. நாம் தனித்தனியாகவோ அல்லது குழுவாகவோ தூய்மைக்கான நமது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் நமது நகரங்கள் சிறந்து விளங்கும்.
தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெண் விவசாயிகள் குழு ஒன்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 800 பெண் விவசாயிகள் குழுவாக இணைந்து சிறு தானிய பொருட்களை தயாரித்து நேரடியாக சந்தைக்கு விற்பனை செய்து வருகின்றனர். அவர்களது பணி பாராட்டத்தக்கது.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அனந்தபூர் பகுதி கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டு வந்தது. இங்குள்ள மண் சிவப்பு மற்றும் மணல் நிறைந்ததாக இருப்பதால் மக்கள் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இதற்கு தீர்வு காணும் வகையில் உள்ளூர் மக்கள் இணைந்து அங்குள்ள நீர்நிலைகளை துார் எடுத்தனர். இதன் மூலம் இப்போது அங்குள்ள 10 நீர் நிலைகள், நீர் நிரம்பி காணப்படுகின்றன.அத்துடன் 10 ஆயிரம் மரக்கன்றுகளும் நட்டு வளர்க்கப்பட்டன. இதன் மூலம் அப்பகுதியின் சுற்றுச்சூழல் மேம்பட்டு காணப்படுகிறது. வறண்ட பாலை வனம் போன்று இருந்த அந்த பகுதியில் இப்போது சிறுவர் சிறுமியர், நீர் நிலைகளில் நீச்சல் அடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது ஊர் மக்களின் ஒற்றுமையான முயற்சிக்கு கிடைத்த வெற்றி அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
குஜராத்தின் பேச்ராஜீல் உள்ள சந்தன கிராமத்தின் பாரம்பரியம் தனித்துவமானது. இங்குள்ள மக்கள், குறிப்பாக முதியவர்கள், தங்கள் வீடுகளில் சமைப்பதில்லை இதற்குக் காரணம் கிராமத்தில் உள்ள சமுதாய சமையற் கூடம்.
அடுத்த மாதம் 'மன் கி பாத் நிகழ்ச்சியில் செயற்கை நுண்ணறிவு தாக்கம் தொடர்பாக நிச்சயமாகப் பேசுவோம்.
நாட்டு மக்களின் வேறு சில சாதனைகளைப் பற்றியும் விவாதிப்போம். மீண்டும் ஒருமுறை, குடியரசு தினத்திற்கு உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Hindusthan Samachar / vidya.b