Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 ஜனவரி (ஹி.ச.)
மக்களின் தேவைகளை உணர்ந்து விதவிதமாகவும் விநோதமாகவும் செயலிகள் உருவாக்குவது இணைய உலகில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தனியாக வசிக்கும் நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 'ஆர் யூ டெட்' என்ற செயலி சீனாவில் உருவாக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதை இதில் உள்ள சிறப்பு பொத்தானை அழுத்தி, ஒவ்வொரு 2 நாட்களுக்கும் ஒருமுறை உறுதி செய்யலாம்.
அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில், பயனர்கள் ஏற்கெனவே பதிந்து வைத்துள்ள நெருக்கமான நபர்களுக்கு தானாகவே முக்கியத் தகவல்கள் தெரிவிக்கப்படும்.
வெகுதொலைவில் தனியாக வசிக்கும் இளைஞர்கள், வயதானவர்கள் உள்ளிட்டவர்களுக்கு பயனளிக்கும் விதமாக இச்செயலி அமைக்கப்பட்டுள்ளது.
மன அழுத்தம் மற்றும் தனிமை போன்ற பிரச்சனைகளை நிவர்த்தி செய்யவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த செயலி உதவும் என கருதப்படுகிறது.
கட்டண செயலியான இதை 105 ரூபாய் செலுத்தி தரவிறக்கி லட்சக்கணக்கான மக்கள், பயன்படுத்தி வருகின்றனர்.
அதே நேரம் 'ஆர் யூ டெட்' என்ற செயலியின் பெயர் எதிர்மறையாக உள்ளதாகவும் இதை ஆர் யூ ஓகே அல்லது ஹவ் ஆர் யூ போன்ற பெயர்களில் மாற்றியமைத்தால் நேர்மறையாக இருக்கும் எனவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / JANAKI RAM