Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 ஜனவரி (ஹி.ச.)
இந்திய வான்வெளி வீரரும், இஸ்ரோவின் க்ரூப் கேப்டனுமான சுபான்ஷு சுக்லாவின் வீர தீர பராக்கிரமத்தை மெச்சி, இந்தியாவின் மிக உன்னதமான அமைதிக்கால விருதுகளில் ஒன்றான அசோக சக்ரா விருதை வழங்கி கெளரவிக்க இருக்கிறார்கள்.
ஜூன் 2025-ல் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆக்ஸியம்-4 விண்வெளிப் பயணத்தில் அவர் ஆற்றிய ஒப்பற்ற, சிறந்த பங்களிப்பிற்காக இந்த உயரிய விருது அவருக்கு உரித்தாகிறது.
சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு முதன்முதலில் சென்ற இந்தியர் என்ற புகழுக்கு மகுடம் சூட்டியுள்ளார். அது மட்டுமின்றி, விண்வெளிப் பயணம் மேற்கொண்ட இந்திய வீரர்களில் ராகேஷ் சர்மாவைத் தொடர்ந்து இவர் இரண்டாவது சாதனையாளர் ஆவார்.
சமீபத்தில் உத்தரப் பிரதேச அரசாங்கம் 'உத்தரப் பிரதேச கௌரவ் சம்மான்' விருதை வழங்கி அவரைக் கௌரவப்படுத்தியது.
லக்னோவைச் சேர்ந்த ஷம்பு தயாள் மற்றும் ஆஷா தம்பதியினரின் இளைய புதல்வராக ஒரு எளிய நடுத்தரக் குடும்பத்தில் சுபான்ஷு சுக்லா பிறந்தார்.
முன்னதாக ஒரு பேட்டியில், விண்வெளி வீரராக வேண்டும் என்பது உங்களது சிறுவயது கனவா என்று கேட்கப்பட்டபோது அதற்கு பதிலளித்த சுபான்ஷு சுக்லா,
இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா 1984-இல் விண்வெளிக்குப் பயணம் செய்தார்; நான் 1985-இல் பிறந்தேன். அவர் விண்வெளிக்குச் சென்றபோது நான் பிறக்கவில்லை, ஆனால் அவருடைய கதைகளைக் கேட்டும், அவருடைய படங்களைப் பார்த்தும், விண்வெளியில் இருந்து அவர் அனுப்பிய செய்திகளைப் பாடப்புத்தகங்களில் படித்தும் நாங்கள் வளர்ந்தோம்.
அவருடைய பயணத்தால் நான் பெரிதும் ஈர்க்கப்பட்டேன், ஆனால் ஒரு விண்வெளி வீரராக வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் அப்போது தோன்றவில்லை, ஏனெனில் அப்போது நம் நாட்டில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் இல்லை.
என்று தெரிவித்திருந்தார்.
Hindusthan Samachar / JANAKI RAM