நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு குறித்து மத்திய ரிசர்வ் வங்கி தகவல் வெளியீடு
புதுடெல்லி, 26 ஜனவரி (ஹி.ச.) நாட்டின் அந்நிய செலாவணி இருப்புகள் பற்றிய விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. முந்தைய கணக்கீடுகளின்படி, கடந்த 16ம் தேதியின் நிலவரப்படி, நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு சுமார் ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 530 கோடி
நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு குறித்து மத்திய ரிசர்வ் வங்கி தகவல் வெளியீடு


புதுடெல்லி, 26 ஜனவரி (ஹி.ச.)

நாட்டின் அந்நிய செலாவணி இருப்புகள் பற்றிய விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

முந்தைய கணக்கீடுகளின்படி, கடந்த 16ம் தேதியின் நிலவரப்படி, நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு சுமார் ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 530 கோடி உயர்ந்து, தற்போது ரூ.63 லட்சத்து 12 ஆயிரத்து 240 கோடியாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, வெளிநாட்டு நாணய சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ.86 ஆயிரத்து 850 கோடி உயர்ந்து, ரூ.50 லட்சத்து 44 ஆயிரத்து 680 கோடியாக உயர்ந்துள்ளது.

தங்கத்தின் கையிருப்பு ஏறத்தாழ ரூ.41 ஆயிரத்து 580 கோடி உயர்ந்து, ரூ.10 லட்சத்து 57 ஆயிரத்து 50 கோடியாக உள்ளது.

இருப்பினும், சிறப்பு வரைவு உரிமைகள் சுமார் ரூ.315 கோடி குறைந்து, ரூ.1 லட்சத்து 68 ஆயிரத்து 336 கோடியாகவும், சர்வதேச நிதியத்தில் இந்தியாவின் இருப்பு சுமார் ரூ.657 கோடி குறைந்து, ரூ.42 ஆயிரத்து 156 கோடியாகவும் உள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM