Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 ஜனவரி (ஹி.ச.)
திமுக மதுரை மாநகர மாவட்டச் செயலாளர் கோ.தளபதி ,
காங்கிரசில் சிலர் இருக்கிறார்கள்.
அவர்கள் பெயரை சொல்ல எனக்கு என்ன பயமா ? மாணிக்கம் தாகூர், ஜோதி மணி போன்றோரை தான் சொல்கிறேன்.
அவர்கள் எம்பியாகிவிட்டார்கள். அவர்கள் இந்த தேர்தலில் யார் எம்எல்ஏ ஆனால் என்ன, ஆகாவிட்டால் என்ன என நினைக்கிறார்கள். அவர்கள் இன்று அதில் பங்கு வேண்டும், இதில் பங்கு வேண்டும் என்கிறார்கள். இவையெல்லாற்றையும் தலைமை புரிந்து அவர்களுக்கு அடுத்த முறை ‘சீட்’டே கொடுக்கக்கூடாது.
அதற்கு நம்மால் ஆன காரியங்களை செய்ய வேண்டும். நான் எதற்காக சொல்கிறேன் என்றால், நாம் உணர்வோடு இண்டியா கூட்டணியில் இருக்கிறோம். இண்டியா கூட்டணியை காப்பாற்றி கொண்டு இருக்கிறோம்.
நாம் இல்லாவிட்டால் இண்டியா கூட்டணியே கிடையாது. டெல்லியில் இக்கூட்டணி பேசப்படுகிறது என்றால், அதற்கு முதல்வர் ஸ்டாலின், ம்மதா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் மூன்று பேர்தான் காரணம்.
இன்னும் சொல்ல பல விவகாரங்கள் உள்ளது அதனை எல்லாம் கூறினால், நல்லதல்ல தப்பாக போய்விடும் என காங்கிரஸ் கட்சியை மிகக் கடுமையாக சாடி இருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளப் பதிவில்,
இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று அன்பு தலைவர் கார்கே அவர்களிடம் கோரிக்கை வைப்பேன்.
தன்மான காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும்.
அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது. Typo Error-கட்சிகள் முடிந்து விட்டது என பதிலடி கொடுத்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN