நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி - அபிஷேக் சர்மா 14 பந்தில் அரைசதம்
கவுகாத்தி, 26 ஜனவரி (ஹி.ச.) இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, கடந்த 2
நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி - அபிஷேக் சர்மா 14 பந்தில் அரைசதம்


கவுகாத்தி, 26 ஜனவரி (ஹி.ச.)

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.

இதனைத் தொடர்ந்து, கடந்த 21ம் தேதி இரு அணிகளும் மோதிய முதல் டி20 யுத்தத்தில், நியூசிலாந்தை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. 23ம் தேதி நடந்த 2வது டி20 போட்டியிலும் நியூசிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சாய்த்து இந்தியா மீண்டும் வெற்றிக் கொடி நாட்டியது.

இந்நிலையில், இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான 3வது டி20 நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான நாணய சுழற்சியில், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். அதன் காரணமாக, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்யத் தொடங்கியது.

இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். டேவான் கான்வே 1 ரன்னிலும், டிம் சீபராட் 12 ரன்களிலும் வெளியேறினர்.

கிளென் பிலிப்ஸ் மற்றும் மார்க் சாப்மேன் ஆகியோர் மட்டும் பொறுப்புடன் விளையாடி அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அவ்வப்போது பந்துகளை எல்லைக்கோட்டுக்கு விரட்டினர். கிளென் பிலிப்ஸ் 48 ரன்களும், மார்க் சாப்மேன் 32 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். மற்ற ஆட்டக்காரர்கள் குறைந்த ரன்களில் வெளியேறினர்.

இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா மற்றும் ரவி பிஷ்ணோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இஷான் கிஷன் 28 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார்.

பின்னர் களம் இறங்கிய அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டு நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சிதறடித்தார். மின்னல் வேகத்தில் விளையாடிய அவர் 14 பந்துகளில் அரைசதம் அடித்து ரசிகர்களை மெய் மறக்கச் செய்தார். அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 68 ரன்கள் விளாசினார்.

மறுபுறம் சூர்யகுமார் யாதவ் தனது பங்குக்கு பந்துகளை சிக்ஸர் மழை பொழிந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அவர் 57 ரன்கள் குவித்தார்.

இறுதியில், இந்திய அணி 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 155 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை தட்டிச் சென்றது.

Hindusthan Samachar / JANAKI RAM