Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 26 ஜனவரி (ஹி.ச.)
நாட்டின் 77வது குடியரசு தின விழா இன்று (26.01.2026) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தையொட்டி நாட்டின் பல்வேறு இடங்களில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு, போர்களில் நாட்டுக்காக தங்களது இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவுகூறும் வகையில், டெல்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்கு பிரதமர் மோடி இன்று காலை சென்றார். அங்கு பிரதமர் மோடியை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் முப்படைகளின் தளபதிகள் வரவேற்றனர்.
போர் வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அப்போது 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியை பார்வையிட்டனர்.
Hindusthan Samachar / vidya.b