Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 ஜனவரி (ஹி.ச.)
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ஆம் தேதி இந்தியக் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்றாலும், நம் நாட்டிற்கான தனி அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு, நடைமுறைக்கு வந்த தினமே குடியரசு தினமாகும்.
வரலாற்றுப் பின்னணி:
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம், 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் அமலுக்கு வந்தது.
அன்று முதல் இந்தியா ஒரு முழுமையான 'மக்களாட்சி குடியரசு' நாடாக அறிவிக்கப்பட்டது.
கொண்டாட்டம் :
தேசியத் தலைநகரான புதுடெல்லியில் குடியரசுத் தலைவர் மூவர்ணக் கொடியை ஏற்றி வைப்பார். முப்படை வீரர்களின் அணிவகுப்பு மற்றும் நாட்டின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகள் ராஜ்பத்தில் (கடமைப் பாதை) வெகு விமர்சையாக நடைபெறும்.
தமிழகத்திலும் ஆளுநர் மற்றும் முதல்வர் முன்னிலையில் சிறப்பான அணிவகுப்புகள் நடைபெறும்.
முக்கியத்துவம் :
இந்நாள் இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் தங்களின் உரிமைகளையும் கடமைகளையும் நினைவூட்டும் நாளாகும். மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் மக்களாட்சி என்ற தத்துவத்தை இது போற்றுகிறது.
வேற்றுமையில் ஒற்றுமை காணும் நமது பாரத தேசத்தின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றும் நாளாக குடியரசு தினம் விளங்குகிறது.
நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவோம் என இந்நாளில் உறுதி ஏற்போம்.
ஜெய் ஹிந்த்!
Hindusthan Samachar / JANAKI RAM