'எச்‌1பி' விசாவுக்கான நேர்காணலை நம்‌ நாட்டில்‌ உள்ள அமெரிக்க தூதரகங்கள் 2027 வரை ஒத்திவைப்பு
புதுடெல்லி, 26 ஜனவரி (ஹி.ச.) அமெரிக்க அதிபராக, கடந்தாண்டு ஜனவரியில்‌ இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப்‌, குடியேற்ற விதிகளை கடுமையாக்கினார்‌. அதன்படி, அமெரிக்காவில் வேலை செய்யத் தேவையான எச்1பி விசாவுக்கான தொகையை சுமார் 89 லட்சம் ரூபாயாக
'எச்‌1பி' விசாவுக்கான நேர்காணலை நம்‌ நாட்டில்‌ உள்ள அமெரிக்க தூதரகங்கள் 2027 வரை ஒத்திவைப்பு


புதுடெல்லி, 26 ஜனவரி (ஹி.ச.)

அமெரிக்க அதிபராக, கடந்தாண்டு ஜனவரியில்‌ இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப்‌, குடியேற்ற விதிகளை கடுமையாக்கினார்‌.

அதன்படி, அமெரிக்காவில் வேலை செய்யத் தேவையான எச்1பி விசாவுக்கான தொகையை சுமார் 89 லட்சம் ரூபாயாக உயர்த்தினார்.

மேலும்‌, விசாவுக்கு விண்ணப்பிப்போரின்‌ சமூக ஊடக கணக்குகள்‌ மறு ஆய்வுக்கு கட்டாயமாக உட்படுத்தப்படும்‌ என்றும்‌ நிபந்தனை விதிக்கப்பட்டது.

இதன் விளைவாக, இந்தியாவின் டெல்லி, மும்பை, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் இருக்கும் அமெரிக்க தூதரகங்களில் எச்1பி விசாவுக்கான நேர்காணல்கள் 2027 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் அக்டோபர் வரை தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது 2027 வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால், விசா கிடைப்பதில்‌ தாமதமாவதால்‌, அமெரிக்காவில்‌ பணிபுரியும்‌ இந்தியர்கள்‌ கடும்‌ பாதிப்படைந்துள்ளனர்‌.

தாயகம்‌ திரும்பிய இந்தியர்கள்‌, மீண்டும்‌ அமெரிக்காவுக்கு செல்ல முடியாத சூழல்‌ நிலவுகிறது.

Hindusthan Samachar / JANAKI RAM