நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று அனைத்துக்கட்சி கூட்டம்
புதுடெல்லி, 27 ஜனவரி (ஹி.ச) 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு, டெல்லியில் இன்று (ஜனவரி 27) பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்துக்கட்சி கூட்டம்


புதுடெல்லி, 27 ஜனவரி (ஹி.ச)

2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு, டெல்லியில் இன்று (ஜனவரி 27) பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கூட்டதொடரை சமூகமாக நடத்த மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடக்கவுள்ளது. முதல்கட்ட அமர்வு வரும் 28ல் துவங்கி, பிப்., 13 வரை நடக்கிறது. சிறு இடைவேளைக்கு பின் மார்ச் 9ல் துவங்கி, ஏப்., 2 வரை இரண்டாம் கட்ட அமர்வு நடக்கவுள்ளது. மத்திய அரசின் 2026-27ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் பிப்., 1ல் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எந்தெந்த பிரச்னைகள் குறித்து விவாதம் நடத்துவது என்பது குறித்தும், எதிர்க்கட்சிகளின் கருத்துகளை கேட்பதற்காக அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதங்கள் அனல் பறக்கும், பட்ஜெட்டில் அறிவிப்புகள் அள்ளி வீசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி திரௌபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்காக பிப்ரவரி 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை மூன்று நாட்கள் லோக்சபாவில் மூன்று நாள் அலுவல் கூட்டம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர, விக்ஸித் பாரத் சிக்ஷா அதிஷ்தான் மசோதா, 2025, பத்திர சந்தைக் குறியீடு, 2025 மற்றும் அரசியலமைப்பு (நூற்று இருபத்தி ஒன்பதாவது திருத்தம்) மசோதா குறித்து விவாதங்கள் நடைபெறும். இந்த மசோதாக்கள் மேலும் ஆய்வுக்காக நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் அல்லது தேர்வுக் குழுக்களுக்கு அனுப்பப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்திற்கு மாற்றாக குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட விக்ஸித் பாரத்-வேலை உத்தரவாதம் மற்றும் அஜீவிகா மிஷன் (கிராமின்) சட்டம் குறித்தும் விவாதம் நடைபெற வாய்ப்புள்ளது என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / vidya.b