கல்லூரி மாணவி தற்கொலை விவகாரத்தில் நீதி கோரி போராடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்
விருதுநகர், 27 ஜனவரி (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு பயின்ற மாணவி சோலை ராணி தனது காதலுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டு அது வைரலானதாக கூறப்படுகிறது. இந்த
தற்கொலை


விருதுநகர், 27 ஜனவரி (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு பயின்ற மாணவி சோலை ராணி தனது காதலுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டு அது வைரலானதாக கூறப்படுகிறது.

இந்த புகைப்படம் கல்லூரியின் முதல்வரின் உதவியாளர் மூலமாக முதல்வர் பார்வைக்கு சென்றதை தொடர்ந்து மாணவி சோலைராணி மற்றும் அவரது தாயை அழைத்து கல்லுரி முதல்வர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலடைந்த மாணவி சோலைராணி கடந்த 20ம் தேதி வீட்டில் வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து மாணவியை தற்கொலைக்கு தூண்டி கல்லூரி முதல்வர், உதவியாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், மாணவியின் மரணத்திற்கு நீதி கோரியும் கடந்த 23ஆம் தேதி இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட மாணவ அமைப்பினர் மற்றும் அதே கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரவு வரை போராட்டம் நடைபெற்ற நிலையில் அனுமதியின்றி மாணவர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட ஏழு பேர் மீது மல்லி காவல் நிலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மாணவியின் தற்கொலைக்கு நீதி கூறி போராடிய மாணவ அமைப்பினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தியும் இறந்த மாணவியின் குடும்பத்திற்க்கு உரிய இழப்பிடு வழங்க வலியுறுத்தியும் கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்த நிலையில் எந்த தீர்வும் இதுவரை காணபடாத நிலையில் இன்று கல்லூரி மாணவர்கள் 16 நபர்கள் கல்லூரி முன்பு போரட்டத்தில் ஈடுபட முயன்றதாகவும் அவர்களை காவல்துறையினர் தடுத்து வலுக்கட்டாயமாக கைது செய்ததால் ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் முற்றுகையிட்டனர்.

பின்னர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய டிஎஸ்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் கைது செய்தவர்களை விசாரணை மேற்கொண்ட பின்பு விடுவிக்கபடும் என கூறிய தன் அடிப்படையில் மாணவர்கள் கலைந்து சென்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam