Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஜனவரி (ஹி.ச.)
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு குதிரை சவாரி, குதிரை இனம் சார்ந்த விலங்குகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியிருப்பதாவது,
குதிரை, கழுதைகளை பயன்படுத்துபவர்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் உரிமம் பெற வேண்டும். அதிக எடைகளை ஏற்றினால் உடனடியாக குதிரை, கழுதை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படும். மகிழ்ச்சியான குதிரை சவாரி, திருமணத்துக்காக பொருட்களை சுமப்பதற்காக பயன்படுத்துவது குறித்து தெளிவாக குறிப்பிட்டு உரிமம் பெற வேண்டும்.
குதிரை வளர்க்கும் நிறுவனங்களும் குதிரையை வைத்திருப்பவர்களும் குதிரையையும் தமிழ்நாடு விலங்கு நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். குதிரை உரிமையாளர்கள், நிறுவனங்கள் மீது வழக்கு எதுவும் இருக்க கூடாது. குதிரைகள் முறையாக பராமரிக்கப்படாவிட்டால் பயன்படுத்த தடை விதிக்கப்படும்.
விலங்கு வதை தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b