Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஜனவரி (ஹி.ச.)
பொருட்களின் விற்பனை விலையில் தள்ளுபடி அளிப்பது மட்டுமின்றி, யூசர்கள் தாங்கள் வைத்துள்ள பழைய டிவைஸ்களை எக்ஸ்சேஞ்ச் அல்லது மறுவிற்பனை செய்வதற்கான ஆப்ஷனையும் பிளிப்கார்ட் வழங்குகிறது.
முன்னர் நீங்கள் ஏதேனும் எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்கும்போது மட்டுமே அளிக்கப்பட்டுவந்த இந்த சலுகை, தற்போது அனைவருக்கும் பொதுவானதாக மாற்றப்பட்டுள்ளது.
அதாவது நீங்கள் எந்தவித எலக்ட்ரானிக் சாதனங்களையும் வாங்காவிட்டாலும் உங்களிடமுள்ள பழைய மொபைல் போனை பிளிப்கார்ட்டில் மறு விற்பனை செய்ய முடியும்.
உங்களது பழைய போனை எவ்வாறு பிளிப்கார்ட் மூலம் மறுவிற்பனை செய்வது என்பதை இப்போது பார்ப்போம்!
1. முதலில் உங்களது போனில் பிளிப்கார்ட் ஆப்பை ஓபன் செய்து ஹோம் பேஜிற்கு செல்லவும்.
2. ஸ்க்ரோல்டவுன் செய்து “Get Best Value for Your Old Phone” என்ற பேனரை கிளிக் செய்யவும்.
3. பேனரை கிளிக் செய்தபின்னர், அதில் “Sell Old Phone” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
4. லிஸ்டில் நீங்கள் விற்பனை செய்யப்போகும் மொபைலின் பிராண்டை செலக்ட் செய்து அதன் மாடலை செலக்ட் செய்யவும்.
அதில் உங்கள் போன் எவ்வளவு வருடங்கள் பழையது?, வொர்க்கிங் கண்டிஷனில் உள்ளதா?, அதன் ஒரிஜினல் பாக்ஸ் இப்போதும் உங்களிடம் உள்ளதா? என்பது போன்ற விவரங்களை என்டர் செய்யவும்.
கடைசியாக அதில் இரண்டு பேமன்ட் ஆப்ஷன்கள் காண்பிக்கப்படும். ஒன்று பிளிப்கார்ட் கிஃப்ட் கார்ட். இதை செலக்ட் செய்தால் உங்களுக்கு 4% கூடுதல் விலை கிடைக்கும். மற்றொன்று நேரடியான உங்களது வங்கிக் கணக்கிற்கு பணப்பரிமாற்றம் நடைபெறும்.
மேற்காணும் படிநிலைகளை சரியாக செய்தபின்னர் உடனடியாகவோ அல்லது ஓரிரு தினங்களிலோ பிளிப்கார்ட் எக்ஸ்பர்ட் ஒருவர் உங்களது வீட்டிற்கே வந்து நீங்கள் மறுவிற்பனை செய்ய விண்ணப்பித்த போனின் தரம், அதன் நிலை, டிஸ்ப்ளே கண்டிஷன் மற்றும் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் சோதனை செய்து இறுதி விலை முடிவு செய்யப்படும்.
உங்களுக்கும் அந்த ஆஃபர் பிடித்திருந்தால் பிளிப்கார்ட் எக்ஸ்பர்ட் SMS மூலம் உங்களுக்கு பேமன்ட் செய்வதற்கான வேலையை தொடங்கி உங்களை வழிநடத்துவார். போனை ஒப்படைப்பதற்கு முன்னர் உங்களது போன் முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
மேலும், அதில் உள்ள தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் முழுவதுமாக அழித்துவிட்டதையும் உறுதி செய்து கொள்ளவும்.
இறுதியாக அனைத்தும் வெற்றிகரமாக முடிவடைந்து உங்களது வங்கிக் கணக்கிற்கு பணப்பரிமாற்றம் நடைபெறுவதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அந்த பணம் உடனடியாக பிளிப்கார்ட் கிஃப்ட் கார்டாக மாற்றி உங்களது கணக்கில் சேமிக்கப்படும்.
Hindusthan Samachar / JANAKI RAM