சிறந்த அரசியல் தலைவராகவும், நல்ல நிர்வாகியாகவும் விளங்கியவர் அஜித் பவார் - முதலமைச்சர் ரங்கசாமி
புதுச்சேரி, 28 ஜனவரி (ஹி.ச.) மராட்டிய மாநில துணை முதல்வர் அஜித் பவார், இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, தனது இரங
Ajith Pawar


புதுச்சேரி, 28 ஜனவரி (ஹி.ச.)

மராட்டிய மாநில துணை முதல்வர் அஜித் பவார், இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, தனது இரங்கலை தெரிவித்து உள்ளார்.

அதில், மஹாராஷ்டிரா மாநிலத்தின் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு அஜித் பவார் அவர்கள் எதிர்பாராத விமான விபத்தில் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தத்தையும் மனவேதனையையும் அளிப்பதாக உள்ளது.

அஜித் பவார் அவர்கள், மஹாராஷ்டிர மாநில வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் அயராது உழைத்த ஒரு ஆளுமையாக அனைவராலும் மதிக்கப்பட்டவர். சிறந்த அரசியல் தலைவராகவும், நல்ல நிர்வாகியாகவும் விளங்கிய அவர், மக்களின் மீதான கருணைக்காகவும், பொதுச்சேவையில் அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பிற்காகவும் மஹாராஷ்டிரா மாநில மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் நிலைத்திருப்பார் என்பதில ஐயமில்லை.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும். அவரைச் சார்ந்த ஏனைய அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பிரார்த்திக்கின்றேன் என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்து இருக்கிறார்.

Hindusthan Samachar / ANANDHAN