Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 28 ஜனவரி (ஹி.ச.)
சுற்றுலாத்துறையின் வாயிலாக கிடைக்கும் வருமானத்தில் இந்தியா ஜப்பானை முந்தியுள்ளது.
இந்தியாவிற்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை வருடா வருடம் அதிகமாகி வரும் நிலையில், வருமானம் இன்னும் அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது.
உலகளவில் சுற்றுலாத்துறை மூலம் அதிக வருவாய் ஈட்டும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதன்மை இடத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த வருடம் கணக்கீட்டின்படி, அமெரிக்கா ஏறத்தாழ ரூ. 196 லட்சம் கோடி வருவாய் ஈட்டி உலக நாடுகளை வியக்க வைத்துள்ளது.
சீனா ரூ. 108 லட்சம் கோடி வருவாயுடன் இரண்டாவது இடத்திலும், ஜெர்மனி ரூ. 40 லட்சம் கோடி வருவாயுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இந்த வரிசையில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.
சென்ற காலங்களில் பத்தாவது இடத்தில் இருந்த பாரதம், தற்போது ஜப்பான் மற்றும் பிரான்ஸ் போன்ற முன்னேறிய நாடுகளை பின்னுக்கு தள்ளி, சுமார் ரூ. 19.22 லட்சம் கோடி வருவாயுடன் உலக அளவில் எட்டாவது இடத்தை தன்வசமாக்கி சாதனை புரிந்துள்ளது.
இந்தியாவின் இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு நாட்டின் பண்பாட்டு சின்னங்கள், இயற்கை எழில் மற்றும் குறைந்த செலவிலான சுற்றுலா வாய்ப்புகள் ஆகியவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகின்றன. குறிப்பாக, உலக பொருளாதார மன்றத்தின் பயண மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் குறியீட்டில் பாரதம் 39-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதிகளில் வந்துள்ள மேம்பாடும் வெளிநாட்டுப் பயணிகளை பெருமளவில் கவர உதவியுள்ளது.
இனி வரும் 2034 ஆம் ஆண்டிற்குள், இந்தியா உலகத்தின் நான்காவது பெரிய சுற்றுலா பொருளாதாரமாக மாறும் என்றும், இது இந்திய பொருளாதாரத்திற்கு ஒரு பக்கபலமாக இருக்கும் என்றும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
Hindusthan Samachar / JANAKI RAM