வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சித் திட்டங்களை நடத்த இஸ்ரோவுடன் இந்திய ரெயில்வே ஒப்பந்தம்
புதுடெல்லி, 28 ஜனவரி (ஹி.ச.) இந்திய ரயில்வே, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு முறையான ''கவாச்'' தொழில்நுட்பத்தின் செயல் திறனை கூர்மையாக்கும் முனைப்பில் இறங்கியுள்ளது. இதற்காக, இந்திய ரயில்வே சிக்னல் என்ஜினீயரிங் மற்றும் த
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சித் திட்டங்களை நடத்த இஸ்ரோவுடன் இந்திய ரெயில்வே ஒப்பந்தம்


புதுடெல்லி, 28 ஜனவரி (ஹி.ச.)

இந்திய ரயில்வே, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு முறையான 'கவாச்' தொழில்நுட்பத்தின் செயல் திறனை கூர்மையாக்கும் முனைப்பில் இறங்கியுள்ளது.

இதற்காக, இந்திய ரயில்வே சிக்னல் என்ஜினீயரிங் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனம் (ஐ.ஆர்.ஐ.எஸ்.இ.டி), இந்திய விண்வெளி ஆய்வு மையத்துடன் (இஸ்ரோ) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடும் இறுதி கட்டத்தில் உள்ளது.

செகந்திராபாத்தில் அமைந்திருக்கும் முதன்மை பயிற்சி நிறுவனம், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), டேட்டா சயின்ஸ், பெரிய தரவு பகுப்பாய்வு, கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் பிளாக்செயின் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களில், இந்திய ரயில்வேயின் பெருகி வரும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பயிற்சி வகுப்புகளை நடத்தவுள்ளது.

இதற்காக சி-டிஏசி (நொய்டா) போன்ற முக்கியமான தேசிய நிறுவனங்களுடன் கைகோர்த்து செயல்படவுள்ளதாக இந்திய ரயில்வே சிக்னல் பொறியியல் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / JANAKI RAM