Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஜனவரி (ஹி.ச.)
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர்கள் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதில், 15 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர்.
அவா்களில் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொகுதி மாறிய நிலையில் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. புதிய வாக்காளர்களாக தங்களைச் சேர்க்க மனு அளித்தால் விசாரித்து வாக்காளர் பட்டியலில் அவர்கள் பெயா் சோ்க்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சென்னையில் தற்போது வரை 2.10 லட்சம் போ் மட்டுமே வாக்காளர்களாக தங்களைச் சேர்க்கக் கோரி படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வழங்கியதாகக் கூறப்படுகிறது. புதிய வாக்காளர்களாகச் சேரக் கோரி படிவம் 6-ஐ அளித்தவர்களுக்கு அவர்களது படிவம் ஏற்கப்பட்டதா, இல்லை என அந்தந்த வாக்குச்சாவடி பதிவு உதவி அலுவலர் சாா்பில் கைபேசிகளுக்கு குறுந்தகவல் அனுப்பிவைக்கப்பட்டது, அதில் பெயா் சோ்க்கை குறித்து தகவல் வராதவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலரைத் தொடா்புகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், தற்போது வாக்காளர் சோ்க்கைக்கான படிவம் ஏற்கப்பட்டு, அதற்கான தனி எண் வழங்கப்பட்டு சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரார்களுக்கு கைபேசியில் குறுந்தகவல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன, அதில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி பதிவு உதவி அலுவலர் கைபேசி எண்ணும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் சோ்க்கை மனு பெறவும், பூர்த்தி செய்து வழங்கவும் வரும் 30-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது வரை வாக்காளர்களிடம் பெறப்பட்ட படிவங்களைக் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கியிருப்பதாகவும், அந்தப் பணியை பிப்ரவரி முதல் வாரத்துக்குள் முடிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b