உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரியின் நீண்ட ஆயுளை பாதுகாத்து வைத்திருக்க உதவும் சில குறிப்புகள்
சென்னை, 28 ஜனவரி (ஹி.ச.) உங்க போன்ல சார்ஜ் டக்குனு இறங்கிடுதா? அப்போ இத மட்டும் செஞ்சா போதும். நம்ம ஸ்மார்ட்போனை தினமும் நிறைய நேரம் பயன்படுத்தி வருவதால் அதோட பேட்டரி சீக்கிரமே பலவீனமாகிறது. இதனால, சார்ஜ் ரொம்ப நேரம் தாக்கு பிடிக்கிற சக்தி பேட்டர
உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரியின் நீண்ட ஆயுளை பாதுகாத்து வைத்திருக்க உதவும் சில குறிப்புகள்


சென்னை, 28 ஜனவரி (ஹி.ச.)

உங்க போன்ல சார்ஜ் டக்குனு இறங்கிடுதா? அப்போ இத மட்டும் செஞ்சா போதும்.

நம்ம ஸ்மார்ட்போனை தினமும் நிறைய நேரம் பயன்படுத்தி வருவதால் அதோட பேட்டரி சீக்கிரமே பலவீனமாகிறது. இதனால, சார்ஜ் ரொம்ப நேரம் தாக்கு பிடிக்கிற சக்தி பேட்டரிக்கு இல்லாம போயிடுது.

உங்கள் பேட்டரியின் நீண்ட ஆயுளை பாதுகாத்து வைத்திருக்க உதவும் சில குறிப்புகள்ட

இப்போ நாடு முழுக்க குளிர் அதிகமா இருக்கு. குறிப்பா வட இந்தியால நிறைய இடத்துல பனிமூட்டமா இருக்கு. இந்த வாட்டி வதைக்கிற குளிருல, ஸ்மார்ட்போன் பேட்டரிய 100% சார்ஜ் பண்ணாலும் டக்குனு தீர்ந்துடுது.

ஸ்மார்ட்போன் பேட்டரில லித்தியம் அயன் இருக்கு. குளிர் அதிகமா இருக்குற நேரத்துல அதோட பேட்டரில இருக்க கெமிக்கல் ரியாக்‌ஷன்ஸ் ஸ்லோ ஆகும். அதனால அதோட பவர் குறையும்.

குளிர்காலத்துல உங்க ஸ்மார்ட்போனோட பேட்டரிய சேவ் பண்ண, ஐபோன் வச்சிருக்கறவங்க லோ பவர் மோட்ல யூஸ் பண்ணலாம். அதே மாதிரி ஆண்ட்ராய்டு யூஸ் பண்றவங்க பேட்டரி சேவர் மோட்ல யூஸ் பண்ணலாம். இந்த ஆப்ஷன் பேக்ரவுண்ட்ல இருக்குற ஆப்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் டவுன்லோட்ஸ்லாம் ஸ்டாப் பண்ணி பேட்டரி யூசேஜ கம்மி பண்ண ஹெல்ப் பண்ணும்.

உங்க ஸ்மார்ட்போனோட ஸ்கிரீன் பிரைட்னஸ் அதிகமா இருந்தா, பேட்டரி சீக்கிரமா காலி ஆயிடும். அதோட முடிஞ்ச வரைக்கும் ஆட்டோ பிரைட்னஸ் ஆப்ஷன யூஸ் பண்ணுங்க. AMOLED ஸ்கிரீன் வச்சிருக்கறவங்க டார்க் மோட் மட்டுமே யூஸ் பண்ணனும்.

தேவையில்லாத நேரத்துல ஜிபிஎஸ், வைஃபை மற்றும் மத்த கனெக்ஷன் ஆப்ஷன்ஸ் ஆஃப் பண்ணி வைங்க. நெட்வொர்க் கம்மியா இருக்குற இல்ல இல்லாத ஏரியாவுல உங்க போனை ஏரோபிளேன் மோட்ல போடுங்க.

உங்க மொபைலை உங்க ஜாக்கெட்டோட இல்ல ஸ்வெட்டரோட பாக்கெட்லயோ இல்ல உங்க கோட்டுக்குள்ள இருக்க பாக்கெட்லயோ வைங்க. இந்த ஹீட் போனோட பேட்டரில நார்மலான டெம்பரேச்சர மெயின்டெயின் பண்ண ஹெல்ப் பண்ணும். இதனால பேட்டரி ரொம்ப நேரம் நீடிக்க ஹெல்ப் பண்ணும்.

அதே மாதிரி உங்க மொபைலை 80ல இருந்து 85% சார்ஜ் ஏத்துனா போதும்.

அத முழுசா சார்ஜ் பண்ணனும்னு அவசியம் இல்ல. அப்படி இல்லனா, பேட்டரியோட லைஃப் குறையும்.

Hindusthan Samachar / JANAKI RAM