யூத்‌ உலக கோப்பை தொடரில்‌ ஜிம்பாப்வேயை 208 ரன்‌ வித்தியாசத்தில்‌ வீழ்த்திய இந்திய அணி - சதம் அடித்து அசத்திய விஹான்
புலவாயோ‌, 28 ஜனவரி (ஹி.ச.) ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவின் மைதானங்களில், 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான உலகக் கோப்பை (50 ஓவர் போட்டி) நடக்கிறது. இது 16வது உலகக் கோப்பை சீசன் ஆகும். ''பி'' பிரிவில் இடம்‌ பெற்ற இந்திய அணி, ஜிம்பாப்வே அ
யூத்‌ உலக கோப்பை தொடரில்‌ ஜிம்பாப்வேயை 208 ரன்‌ வித்தியாசத்தில்‌ வீழ்த்திய இந்திய அணி - சதம் அடித்து அசத்திய விஹான்


புலவாயோ‌, 28 ஜனவரி (ஹி.ச.)

ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவின் மைதானங்களில், 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான உலகக் கோப்பை (50 ஓவர் போட்டி) நடக்கிறது. இது 16வது உலகக் கோப்பை சீசன் ஆகும்.

'பி' பிரிவில் இடம்‌ பெற்ற இந்திய அணி, ஜிம்பாப்வே அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. சொந்த மண்ணான புலவாயோவில் ஜிம்பாப்வே அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் ஜார்ஜ் மற்றும் வைபவ் கூட்டணி மின்னல் வேகத்தில் ரன் குவிக்க ஆரம்பித்தனர். 10.2 ஓவர்களில் 100 ரன்களைக் குவித்தபோது, கேப்டன் ஆயுஷ் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய வைபவ் 30 பந்துகளில் 52 ரன்களை விளாசி வெளியேறினார். வேதாந்த் நிலைத்து நிற்கவில்லை.

விஹான் மற்றும் அபிக்யான் ஜோடி சேர்ந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தனர். அபிக்யான் 61 ரன்களில் வெளியேற, அம்ப்ரிஷ் 21 ரன்களும், ஹிலான் 30 ரன்களும் எடுத்தனர்.

விஹான் சதம் அடித்து அசத்தினார். இந்திய அணி 50 ஓவர்களில் 352/8 ரன்களைக் குவித்து மலைக்க வைத்தது. விஹான் (109) கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.

ஜிம்பாப்வே அணிக்கு நாதனியல் (0) மற்றும் துருவ் (8) ஜோடி அதிர்ச்சி அளித்தனர். பிரண்டனை (3) அம்ப்ரிஷ் வெளியேற்றினார். லீ ராய் அதிகபட்சமாக 62 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ஏமாற்ற ஜிம்பாப்வே அணி 37.4 ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வி அடைந்தது.

புள்ளிப்பட்டியலில் இந்தியா (6 புள்ளிகள்) முதலிடத்தில் உள்ளது. ஜிம்பாப்வே, வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் அரையிறுதி வாய்ப்பை நழுவவிட்டன.

Hindusthan Samachar / JANAKI RAM