Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 30 ஜனவரி (ஹி.ச.)
108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வருடாந்திர ஊதிய உயர்வு 16%ல் இருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளதை மீண்டும் 16% உயர்த்த வேண்டும், 108 ஆம்புலன்ஸ் சேவையை அரசாங்கமே ஏற்று நடத்தி அதில் பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தர படுத்த வேண்டும், தாமதமாக வழங்கப்படும் ஊதியங்களை குறிப்பிட்ட தேதியில் சரியாக வழங்க வேண்டும், பணியில் இருக்கும் பொழுது உயிரிழந்தால் 50 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் அதேசமயம் நிர்வாக காப்பீட்டுத் தொகையாக 20 லட்சம் வழங்க வேண்டும், 8 மணி நேர வேலை செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், தீபாவளி ஊக்க தொகையாக 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் டாடாபாத் பகுதியில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இது குறித்து பேசிய தமிழ்நாடு 108 அவசர உறுதி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் பேரவை செயற்குழு உறுப்பினர் இருளாண்டி,
நாங்கள் கொரோனா காலங்கள், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்கள், பண்டிகை காலங்கள் என அயராது உழைத்ததாகவும் எங்களது நியாயமான கோரிக்கைகளை தான் தற்போது வலியுறுத்துவதாக தெரிவித்தார்.
பகுதி நேர ஆசிரியர்கள் தூய்மை பணியாளர்களுக்கு ஆகியோர்களுக்கு எல்லாம் முதலமைச்சர் அவர்களது நலனுக்காக அறிக்கைகள் வெளிவிடும் நிலையில் தங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர் தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாத பட்சத்தில் சென்னையில் 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் இருந்து முதல்வரின் இல்லத்தை நோக்கி கோரிக்கை நடை பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறினார்.
Hindusthan Samachar / Durai.J