Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 30 ஜனவரி (ஹி.ச.)
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முதன்மை பொது செயலாளர் கே.சி வேணுகோபால் வருகின்ற பிப்ரவரி 1 ஆம் தேதி சென்னை வருகின்றார்.
அன்று மாலை மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிய மத்திய பா ஜ க அரசை கண்டித்து செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் நடைபயனத்தில் கலந்து கொள்கின்றார்.
அதன் பின்பு பாண்டிச்சேரி செல்லும் அவர் மறுநாள் பிப்ரவரி 2 ஆம் தேதி காலை முன்னாள் பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெறும் பாதயாத்திரை நிறைவு நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
சென்னை வரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முதன்மை பொது செயலாளர் கே சி வேனுகோபால் அன்று மாலை முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து காங்கிரஸ்
தி.மு.க கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam