Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 30 ஜனவரி (ஹி.ச)
பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜனவரி 30) மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி, ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார்.
இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் வெளியிட்ட பதிவில்,
ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினேன். அவரது காலத்தால் அழியாத கொள்கைகள் நமது தேசத்தின் பயணத்திற்கு தொடர்ந்து வழிகாட்டுகின்றன.
அவரது கொள்கைகளுக்கும், நீதி, நல்லிணக்கம் மற்றும் மனிதகுலத்திற்கு சேவை செய்வதில் வேரூன்றிய ஒரு இந்தியாவை உருவாக்குவதற்கும் நாங்கள் எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்,
என்று கூறினார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் ராஜ்காட்டில் மலரஞ்சலி செலுத்தினார். மேலும், மகாத்மா காந்தி ஸ்மிருதி ஸ்தலத்தில் நடைபெற்ற சர்வமதப் பிரார்த்தனைக் கூட்டம் மற்றும் தியாகிகள் தின நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சஞ்சய் சேத், மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் மற்றும் பல மூத்த தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்ட மற்ற தலைவர்களும் காந்திக்கு அஞ்சலி செலுத்தினர்.
Hindusthan Samachar / vidya.b