Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 30 ஜனவரி (ஹி.ச.)
தஞ்சை கள்ளுக்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தை செல்வப்பெருந்தகை
தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செல்வப் பெருந்தகை கூறியதாவது;
தமிழ்நாட்டில் முன்மாதிரியான மருத்துவமனையாக குழந்தை இறப்பு விகிதத்தை
முழுமையாக குறைத்து இருக்கிறார்கள் இது பாராட்டக்கூடியது என்றார்.
கண் அறுவை சிகிச்சையும் மகப்பேறு பிரசவமும் தமிழ்நாட்டில் முதன்மை மாவட்டமாக தஞ்சை உள்ளது.
இதில் தஞ்சை மாவட்டம் முன்னுதாரண மாவட்டமாக திகழ்வது பாராட்டுக்குரியதாக
உள்ளது என்றுசெல்வப் பெருந்தகை மாவட்ட ஆட்சியரை பாராட்டினார்.
ராகுல் காந்தி கனிமொழி சந்திப்பில் 41 எம்எல்ஏ சீட் ஒரு ராஜ்யசபா சீட்
கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு, எனக்கு தெரியவில்லை அது உண்மை அல்ல என்ற செல்வப் பெருந்தகை அது தெரிந்து இருந்தாலும் பத்திரிகைகளுக்கு சொல்வது நாகரீகமாக இருக்காது.
ஒப்பந்தம்
கையெழுத்திடும் பொழுது அது பற்றி கண்டிப்பாக சொல்வேன் என்று கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam