Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஜனவரி (ஹி.ச.)
தமிழ்த் திரையுலகில் சிறந்த படைப்புகளை ஊக்குவித்து, நடிகர்-நடிகையர்கள் மற்றும் நுட்பக் கலைஞர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் ‛தமிழ்நாடு மாநில திரைப்பட விருது’களை தமிழ்நாடு அரசு வழங்கியது.
அதில்,பொட்டென்சியல் ஸ்டுடியோஸ் சார்பில் உருவான திரைப்படங்களுக்காக விருதுகள் பெற்ற அனைத்து நடிகர்-நடிகையர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் பொட்டென்சியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.
2016 – மாநகரம்
* சிறந்த படம் – முதல் பரிசு
* சிறந்த இயக்குனர் – லோகேஷ் கனகராஜ்
* சிறந்த தையற் கலைஞர் – பி. செல்வம்
2019 – மான்ஸ்டர்
* சிறந்த நகைச்சுவை நடிகர் – கருணாகரன்
2022 – டாணாக்காரன்
* சிறந்த திரைப்படம் – இரண்டாம் பரிசு
* சிறந்த நடிகர் – விக்ரம் பிரபு
* சிறந்த குணச்சித்திர நடிகர் – போஸ் வெங்கட்
மாநகரம், மான்ஸ்டர், மற்றும் டாணாக்காரன் ஆகிய திரைப்படங்களுக்காக விருது பெற்றவர்கள் மற்றும் படத்தில் பங்காற்றிய நடிகர்-நடிகையர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த பாராட்டுகள்.
மீண்டும் ஒருமுறை, தமிழ்நாடு அரசு, விருதுகள் தேர்வுக் குழு, மற்றும் தமிழ்த் திரையுலகை தொடர்ந்து ஆதரித்து வரும் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பொட்டென்சியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / Durai.J