Enter your Email Address to subscribe to our newsletters

லக்னோ, 30 ஜனவரி (ஹி.ச.)
வங்க தேசத்திலிருந்து இடம்பெயர்ந்த 99 ஹிந்து குடும்பங்களுக்கு புது வாழ்வு கொடுக்க உத்தர பிரதேச அரசு ஒரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
உத்தர பிரதேச அமைச்சரவை கூட்டத்துக்கு பின் நிதி அமைச்சர் சுரேஷ் குமார் கண்ணா கூறியதாவது:
மீரட் மாவட்டத்திலுள்ள மவானா பகுதியில் 99 ஹிந்து குடும்பங்கள் சட்டத்துக்குப் புறம்பாக குடியிருக்கிறார்கள். தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் ஆணையினை ஒட்டி, அவர்கள் வேறு இடத்துக்கு மாற்றப்படுவார்கள்.
புது வாழ்வு திட்டத்தின் வாயிலாக, கான்பூர் தேஹாத் மாவட்டத்தில் உள்ள பைன்சாயா கிராமத்தில், புதுவாழ்வு துறையின் ஆவணத்தில் உள்ள 2751 ஏக்கர் நிலத்தில் 50 குடும்பங்கள் குடியமர்த்தப்படுவார்கள்.
எஞ்சியிருக்கும் 49 குடும்பங்கள் தாஜ்பூர் தர்செளலி கிராமத்தில் இருக்கிற 26.01 ஏக்கர் நிலத்தில் தங்க வைக்கப்படுவார்கள்.
என்று தெரிவித்தார்.
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வரும் நிலையில், உத்தர பிரதேச அரசின் இந்த முயற்சியை ஹிந்து அமைப்புகள் மனதார வரவேற்கின்றன.
Hindusthan Samachar / JANAKI RAM