அரசு பள்ளித் தூதுவர் திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று தொடங்கி வைத்தார்
சென்னை, 30 ஜனவரி (ஹி.ச.) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (30.01.2026) சென்னை, அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அரசுப் பள்ளித் தூதுவர் திட்டத்தினை அரசுப்பள்ளித் தூதுவர்கள் பதவியேற்பு உறுதிமொழியில் கையொப்பம
அரசு பள்ளித் தூதுவர் திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று  தொடங்கி வைத்தார்


சென்னை, 30 ஜனவரி (ஹி.ச.)

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (30.01.2026) சென்னை, அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அரசுப் பள்ளித் தூதுவர் திட்டத்தினை அரசுப்பள்ளித் தூதுவர்கள் பதவியேற்பு உறுதிமொழியில் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் மாணவர் வழிகாட்டுதல் திட்டத்தினை தொடங்கி வைத்து, விழுதுகள் செயலியினை வெளியிட்டார்.

இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மரு. சந்தர மோகன்.B மாநில திட்டக்குழு செயல் துணைத்தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் மற்றும் விண்வெளித்துறை செயலர் வி.நாராயணன், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, மாதிரிப்பள்ளிகள் உறுப்பினர் செயலர் ஆர்.சுதன் (வி.ஓய்வு), பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அரசுப் பள்ளி தூதுவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / vidya.b