Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 31 ஜனவரி (ஹி.ச.)
கோயம்புத்தூர் மாவட்டம், பீளமேடு கிரியம்மன் கோவில் வீதியில் காசி விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான தெர்மாகோல் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.
நான்கு
ஆண்டுகளாக அப்பகுதியில் செயல்பட்டு வரும் அந்த நிறுவனத்தில் நான்கு பேர் பணியாற்றி வந்த நிலையில் அவர்கள் மதிய உணவு உட்கொள்வதற்காக வெளியில் சென்ற சூழலில் சில நிமிடங்களில் நிறுவனத்திலிருந்து திடீரென கடும் புகை வெளியேறியது.
மேலும், நிறுவனத்தில் இருந்த தெர்மாகோலில் வேகமாக பரவிய தீ மளமளவெனப் பரவியது. இதனால் கரும் புகை வெளியேறியதால் வீடுகளில் இருந்தவர்கள் மூச்சுவிட சிரமப்பட்டு வீட்டை விட்டு வெளியேறினர். தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
தீ முழுமையாக கட்டுப்படுத்தபட்ட நிலையில் , விபத்திற்கான காரணம் குறித்து தீயணைப்பு
துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
தீ விபத்து
நடைபெற்ற இடத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தியதாகவும் ஆவணங்கள்
முறையாக உள்ளதா என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார். மேலும் குடியிருப்பு பகுதிகளில் இதுபோன்ற நிறுவனங்கள் செயல்படக்கூடாது
என்றும் மாநகராட்சி பகுதிகளில் வேறு எங்காவது இது போன்ற நிறுவனங்கள்
செயல்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
தெரிவித்துக் கொள்ளாத நிறுவனத்திற்கு சொந்தமான மேலும் இரண்டு தேமாகோல்
நிறுவனங்கள் அதே பகுதியில் செயல்பட்டு வரும் நிலையில் அந்த நிறுவனங்களை
குடியிருப்பு பகுதியில் இருத்து வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam