Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 31 ஜனவரி (ஹி.ச.)
புதுடெல்லியில் இன்று
(ஜனவரி 31) இரண்டாவது இந்தியா-அரபு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்து நடத்தும் இந்தக் கூட்டத்தில், அரபு லீக் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் அரபு லீக் பொதுச் செயலாளர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இரண்டாவது இந்தியா-அரபு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் (IAFMM) கலந்துகொள்வதற்காக ஓமன் வெளியுறவுத்துறை அமைச்சர் பத்ர் அல்பூசைடி இன்று புதுடெல்லிக்கு வருகை புரிந்தார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று (ஜனவரி 31) புது டெல்லியில் ஓமன் வெளியுறவுத்துறை அமைச்சர் பத்ர் அல்பூசைடியை சந்தித்தார். அப்போது இரு தரப்பினரும் வர்த்தகம், முக்கிய கனிமங்கள் மற்றும் பிராந்திய நிலவரங்கள் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.
சமூக ஊடக தளமான எக்ஸில் இதுகுறித்து பதிவிட்ட வெளியுறவுத்துறை அமைச்சர்,
கூறியிருப்பதாவது,
இன்று காலை ஓமன் வெளியுறவுத்துறை அமைச்சர் பத்ர் அல்பூசைடியுடன் உரையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. வர்த்தகம், முக்கிய கனிமங்கள் மற்றும் பிராந்திய நிலவரங்கள் குறித்த எங்கள் விவாதங்கள், கூட்டாண்மையின் நம்பிக்கை மற்றும் இணக்கத்தை பிரதிபலித்தன.
என்று கூறினார்.
மேலும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கொமொரோஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் எம்பே முகமது; சூடான் வெளியுறவுத்துறை அமைச்சர் மொஹியெல்டின் சலீம் அகமது இப்ராஹிம்,லிபியா வெளியுறவுத்துறை அமைச்சர் எல்டாஹெர் எஸ்.எம். எல்பாவுர்; சோமாலியா வெளியுறவுத்துறை அமைச்சர் அப்திசலாம் அலி,மற்றும் பாலஸ்தீனத்தின் வெளியுறவு மற்றும் வெளிநாடு வாழ் மக்கள் நலத்துறை அமைச்சர் வர்சென் அகபெக்கியன் ஆகியோருடனும் தனித்தனியாக சந்திப்புகளை நடத்தினார்.
இந்த விவாதங்கள் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் பல துறைகளில் கூட்டாண்மையை ஆழப்படுத்துவது ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தன.
Hindusthan Samachar / vidya.b