Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 31 ஜனவரி (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 5,000 ஏக்கரில் மல்லிகை பூ சாகுபடி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி, அவதானப்பட்டி, காவேரிப்பட்டணம், திம்மாபுரம் சுற்று வட்டார பகுதிகளில் மல்லிகை சாகுபடி அதிகளவில் செய்யப்படுகிறது.
இங்கு சாகுபடி செய்யப்படும் மல்லிகைப்பூ சரக்கு வாகனங்களில் பெங்களூரு மலர் சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு ஏலம் முறையில் பூக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது, மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், பூக்கள் விலை உயர்ந்தும், பூச்சி தாக்குதலுக்கு மருந்து தெளிப்பு உள்ளிட்ட பராமரிப்புச் செலவு அதிகரித்துள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
மார்கழி மாதம் முடிந்தும் கூட அதிகளவில் பனிப்பொழிவு உள்ளது. இதனால் விளைச்சலில், 60 சதவீதத்திற்கு மேல் பூக்கள் கருகிவிடுகின்றன. இதற்காக செடிகளுக்கு மருந்துஅடித்தும் விளைச்சல் அதிகரிக்கவில்லை.
சாதாரணமாக கிலோ, 300 ரூபாய்க்கு விற்றால் கூடவிவசாயிகளுக்கு லாபம் உள்ள நிலையில், தற்போது விளைச்சல் மிக குறைவான அளவில் இருப்பதால் கிலோ, 1,000 ரூபாய்க்கு மேல் விற்றும் லாபம் கிடைப்பதில்லை.
இவ்வாறு கூறினர்.
Hindusthan Samachar / vidya.b