Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 05 ஜனவரி (ஹி.ச.)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் கோவை மாநகர் மாவட்டம் சார்பாக சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் உக்கடம் பகுதியில் உள்ள வின்சென்ட் சாலையில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்ற இதில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் மாநில தலைவர் அப்துல் கரீம் கலந்து கொண்டு உரையாற்றினார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஆளும் தி.மு.க.அரசு தனது கடந்த தேர்தல் அறிக்கையில் இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை அதிகபடுத்துவொம் என கூறி இருந்ததை சுட்டி காட்டிய அவர், ஆனால் அதனை நிறைவேற்றாமல் ஆட்சி செய்து தற்போது அடுத்த தேர்தலும் வர உள்ளதாக கூறினார்.
எனவே இஸ்லாமியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான இட ஒதுக்கீடு கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றி தர முன்வரவேண்டும்.
தமிழகத்தில் சென்னை,கோவை போன்ற பெருநகரங்களில் போதை பொருட்களின் புழக்கங்கள் அதிகரித்து உள்ளதாக கூறிய அவர்,திருத்தணி வட மாநில இளைஞர் தாக்குதல் விவகாரத்தின் பின்னனியில் கூட போதை பொருள் பழக்கங்கள் அதிகரிப்பின் விளைவு தான் என்பது தெரிவதாக கூறினார்.
போதை பொருட்கள் அதிகரிப்பால்,தமிழகமெங்கும் கலவர காடாக மாறும் அபாயம் இருப்பதாக கூறிய அவர்,தமிழகத்தில் பூரண மது விலக்கு அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இந்தூரில் குடிதண்ணீரில் கழிவுழீர் கலந்து பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரத்தில் ஆளும் பா.ஜ.க.அரசின் தோல்வியை காட்டுவதாக கூறிய அவர்,இந் சம்பவத்திற்கு பகிரங்கமாக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார்.
அண்மையில் வட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் கிறிஸ்துமஸ் விழாக்களில் ஏற்பட்ட வன்முறைகள் மத சுதந்திரத்திற்கும்,மனித உரிமைகளுக்கும் நேரடியான சவாலாக இருப்பதாக வேதனை தெரிவித்தார்.
Hindusthan Samachar / Durai.J