Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 6 ஜனவரி (ஹி.ச.)
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒரு முக்கியமான முயற்சி ஆனது எஸ்ஐஆர் என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஸ்பெஷல் இன்டென்சிவ் ரிவிஷன் என்று அழைக்கப்படுகிறது. இது அடுத்த தேர்தல்களுக்கு முன்னர் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கப்பட்ட நிலைக்கு கொண்டு வருவதை நோக்கமாக கொண்டுள்ளது.
வழக்கமான புதுப்பிப்புகளுடன் ஒப்பிடுகையில், இந்திய தேர்தல் ஆணையம் ஆனது இந்த சமீபத்திய முயற்சியின் கீழ், அனைத்து வாக்காளர்களும் - முன்னர் வாக்களிக்க பதிவுசெய்தவர்கள் கூட - வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களை சேர்க்க புதிய கணக்கீட்டு படிவங்களை நிரப்ப வேண்டும்.
இது தற்போதைய வாக்காளர் பட்டியலில் இருந்து ஏதேனும் தவறான உள்ளீடுகளை (எ.கா., இறந்து போன, பகுதியை விட்டு வெளியேறிய அல்லது தங்கள் வசிப்பிடத்தை மாற்றிய வாக்காளர்கள்) அகற்றவும் அனுமதிக்கும் மற்றும் புதிய, தகுதியுள்ள குடிமக்களை சேர்க்கவும் அனுமதிக்கும்.
ஒட்டுமொத்தமாக வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை கண்டறிவது, உங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்வது - உங்கள் வாக்களிக்கும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான படியாக, செயல்முறையாக மாறியுள்ளது.
எஸ்எம்எஸ், ஆன்லைன் மற்றும் அதிகாரப்பூர்வ மொபைல் ஆப் என வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை சரிபார்க்க 3 வழிகள் உள்ளன.
1. எஸ்எம்எஸ் வழியாக சரிபார்ப்பது எப்படி?
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை சரிபார்க்க 1950 என்கிற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். உங்கள் இபிஐசி எண்ணை டைப் செய்து 1950 என்கிற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பவும். சில நொடிகளில் உங்கள் தகவல் அனைத்தும் மெசேஜ் வழியாக பகிரப்படும்.
2. அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக சரிபார்ப்பது எப்படி?
இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும். வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைத் தேடத் தொடங்க, சர்ச் எலக்ட்ரோல் ரோல் என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும். உங்கள் இபிஐசி எண் அல்லது உங்கள் தனிப்பட்ட தகவலை (அதாவது பெயர், வயது, மாவட்டம்) உள்ளிடவும். இந்த வலைப்பக்கத்தில் தேடலில் கிடைத்த முடிவுகளில் உங்கள் பெயர் தோன்றினால், நீங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளீர்கள்.
3. ஆப் வழியாக சரிபார்ப்பது எப்படி?
உங்கள் ஸ்மார்ட்போனில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ ஈசிஐநெட் மொபைல் ஆப்பை நிறுவவும். இந்த ஆப்பில் உள்ள சர்ச் அம்சத்தைப் பயன்படுத்தி உங்கள் இபிஐசி எண் அல்லது பிற தொடர்புடைய தனிப்பட்ட விவரங்களை உள்ளிடுவதன் மூலம் உங்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபார்க்கலாம்.
தேர்தல் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டிருப்பதை கண்டால், வரவிருக்கும் தேர்தல்களில் நீங்கள் வாக்களிக்கத் தகுதியுடையவர். வாக்காளர் பட்டியலில் அது தோன்றவில்லை என்றால், உரிமைகோரல் காலத்தில் அதை சேர்க்க நீங்கள் ஒரு கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
Hindusthan Samachar / JANAKI RAM