Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 ஜனவரி (ஹி.ச.)
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அந்தக் கட்சியின் வர்த்தக அணி ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவின் கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் நடிகை கௌதமி கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தவர்,
அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளதை நான் வரவேற்கிறேன் வலுவான கூட்டணியை திமுகவிற்கு எதிராக நாங்கள் அமைத்து வருகிறோம்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்பது என்பது ஒவ்வொரு கட்சிக்கும் தேர்தல் நேரத்தில் ஒரு நோக்கம் இருக்கும் அந்த நோக்கத்தின் அடிப்படையில் அவர்கள் கேட்கிறார்கள் என்றவர்,
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பெரும்பான்மை மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அரசு செயல்பட்டிருக்க வேண்டும் ஆனால் மிகப் பெரிய தவறை அவர்கள் செய்திருக்கிறார்கள் தீபத்தூணை சுடுகாட்டுடன் அமைச்சர் ஒப்பிட்டு பேசுவது தவறு.
அமைச்சர் அனைவருக்கும் பொதுவானவர் அப்படி சொல்லி தான் அவர் பதவி ஏற்றிருக்கிறார்.
அப்படி இருக்கும் பொழுது ஒரு சாராருக்காக அவர் பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகு அல்ல என்றார்
Hindusthan Samachar / P YUVARAJ