அஇஅதிமுக- பாமக இயற்கையான கூட்டணி, வெற்றிக் கூட்டணி - எடப்பாடி பழனிசாமி நெகிழ்ச்சி
சென்னை, 07 ஜனவரி (ஹி.ச) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - பாரதிய ஜனதா வெற்றிக் கூட்டணியில் இணைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம் என்று அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இது
Admk


Tw


சென்னை, 07 ஜனவரி (ஹி.ச)

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - பாரதிய ஜனதா வெற்றிக் கூட்டணியில் இணைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம் என்று அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

அஇஅதிமுக- பாமக இயற்கையான கூட்டணி, தமிழக மக்களின் எண்ணங்களை அறிந்து செயல்படும் கூட்டணி

அந்த அடிப்படையில், இன்றைய தினம், நானும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் சந்தித்து நம் வெற்றிக் கூட்டணிக்கான அச்சாரமிட்டோம்.

மக்கள் விரோத விடியா திமுக ஆட்சியை அகற்றி, தமிழக மக்களின் ஒருமித்த எண்ணப்படி 2026ல் அதிமுகவின் நல்லாட்சியினை அமைப்போம் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ