இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து
புதுடெல்லி, 07 ஜனவரி (ஹி.ச.) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி இன்று (ஜனவரி 07) பேசினார். இதுபற்றி பிரதமர் மோடி இன்று வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது, என்னுடைய நண்பர் பிரதமர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யா
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து


புதுடெல்லி, 07 ஜனவரி (ஹி.ச.)

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி இன்று (ஜனவரி 07) பேசினார்.

இதுபற்றி பிரதமர் மோடி இன்று வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது,

என்னுடைய நண்பர் பிரதமர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசியதில் மகிழ்ச்சி. அவருக்கும் மற்றும் இஸ்ரேல் மக்களுக்கும் ஆங்கில புதுவருட வாழ்த்துகளை தெரிவித்து கொண்டேன்.

வரும் ஆண்டில், இந்தியா-இஸ்ரேல் நட்புறவை இன்னும் வலுப்படுத்துவது தொடர்பாக நாங்கள் இருவரும் ஆலோசனை மேற்கொண்டோம். பிராந்திய சூழல் பற்றிய பார்வைகளை இருவரும் பரிமாறி கொண்டோம்.

பயங்கரவாதத்திற்கு எதிராக சிறந்த உறுதியுடன் போராடுவது என்ற பகிரப்பட்ட தீர்மானத்தை இருவரும் மீண்டும் உறுதிப்படுத்தி கொண்டோம்

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Hindusthan Samachar / vidya.b