ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல தடை
ராமநாதபுரம், 07 ஜனவரி (ஹி.ச.) வங்கக் கடலில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த சூறாவளி காற்று வீசும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது. அந்த நிலையில் ராமேஸ்வரம் பாம்பன் கடற் பகுதியில் பலத்த சூறாவளி காற்றும் வீசி வருகிறது எனவே ராமேஸ
Fisherman


ராமநாதபுரம், 07 ஜனவரி (ஹி.ச.)

வங்கக் கடலில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த சூறாவளி காற்று வீசும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

அந்த நிலையில் ராமேஸ்வரம் பாம்பன் கடற் பகுதியில் பலத்த சூறாவளி காற்றும் வீசி வருகிறது எனவே ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத் துறையினர் அறிவித்துள்ளனர்.

மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கூறியுள்ளனர் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல விசைப்படகு மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதிச்சிட்டு வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தங்களது படகுகளை பத்திரமாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கும்படி மின்வளத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN