Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 07 ஜனவரி (ஹி.ச.)
ஈரோடு நீதிமன்றத்தில் தேர்தல் விதிமீறல் வழக்கு விசாரணைக்காக ஈரோடு
நீதிமன்றத்தில் ஆஜரான பின், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் தெரிவித்ததாவது :
அனுமதி பெறாமல் பிரச்சாரம் செய்ததற்காகவும் குறிப்பிட்ட நேரத்தை கடந்து பிரச்சாரம் செய்வதற்காகவும் வழக்கு பதிவு செய்தார்கள்.
எதற்காக இதை பதிவு செய்தார்கள் என தெரியவில்லை அலைகழிப்பதற்காக வழக்குகளை
பதிவு செய்துள்ளார்கள்.
அதிமுக கொடுத்த குற்றச்சாட்டு இரு தரப்பும் மாறி மாறி குறை சொல்லி இது போன்ற
குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர் இது பெரும் துயரம் ஒரு பக்கம் ஊழல்
இல்லை நாங்கள் நேர்மையானவர்கள் என காட்ட நினைக்கின்றனர்.
இதை எப்படி எடுத்துக்
கொள்வது தேர்தல் வரும் பொழுது வழக்கமாக நடைபெறக்கூடிய வாடிக்கையான ஒன்று
திருவிழாக்களில் நடக்கும் நாடகம் போன்று இது போன்ற குற்றச்சாட்டுகள் பார்த்து ரசித்து சிரித்து விட்டு செல்வதுதான்.
பாமகவில் அன்புமணிக்கு ஒரு வாய்ப்பு தான் இருந்தது, அதிமுக கூட்டணி எதிர்பார்த்ததுதான்.
பொங்கல் பரிசு தொகை தேர்தலுக்காக கொடுக்கப்பட்டது தான் மக்களுக்காக
கொடுக்கப்பட்டதாக இருந்தால் கடந்த ஆண்டுகளில் கொடுத்திருக்க வேண்டும் சம வேலை சம ஊதியம் கேட்டு போராடக்கூடிய ஆசிரியர்களுக்கு ஊதியம் தர முடியவில்லை
செவிலியர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
துப்புரவு பணியாளர் போராட்டம் என வீதியில் இறங்கி போராடி வருகின்றார்கள். நீண்ட காலமாக போராடி வரக்கூடிய அரசு
ஊழியர்களுக்கு எதுவும் செய்யவில்லை.
30 லட்சம் மடிக்கணினி இத்தனை நாட்கள் கடந்து இப்போது கொடுக்க வேண்டிய அவசியம்
என்ன மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால் கடந்த ஆண்டு கொடுத்திருக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல தேவையில்லை தீபம் ஏற்ற சொன்னால் ஏற்றி விடலாமே. தர்காவில் இஸ்லாமிய பெருமக்களுக்கு இருக்கும் அதே உரிமை விளக்கு ஏற்றுவதற்கும் இருக்கிறது.
அவரவர் வழிபாட்டு உரிமை அவரவர்களுக்கு உள்ளது. இரு மத பெரியவர்களை அழைத்து வழிபாடு
தொடர்பாக பேசி தீர்த்திருக்க வேண்டும்.
கரூரில் இவ்வளவு பெரிய சம்பவம் நடந்தும், விஜயை விசாரணை வெளியத்திற்குள்ளாகவே
இந்த அரசு முதலில் கொண்டு வரவில்லை, அவரை சிபிஐ விசாரிப்பதில் குற்றமில்லை, இதை வைத்து கருத்து எதுவும் சொல்ல முடியாது.
ஜனநாயகன் படத்திற்கு தடை விதிக்கும் அளவிற்கு காட்சிகள் எதுவும் இல்லை.
மதரீதியாக காட்சிகள் இருந்தால் அதை நீக்கிவிட்டு அனுமதி வழங்கலாமே.
கடந்த தேர்தலில் 40 சீட், 400 கோடி தருவதாக அழைத்தும் கூட்டணிக்கு செல்லவில்லை
என நேற்றைய கூட்டத்தில் சீமான் பேசி இருந்தார். இது குறித்து செய்தியாளர்கள்
கேள்வி எழுப்பிய போது, அதிமுக, பாஜக தான் கூட்டணிக்கு அழைத்தார்கள் என பதில்
அளித்தார்.
பணம் தருவதாக சொன்னார்களா? என மீண்டும் கேட்டதற்கு, அது இப்போ இல்லை, அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நிற்கிறேன் என்றார்.
வேண்டாம் என சொன்ன பிறகு யார் அழைத்தால் என்ன என சிரித்தபடி மழுப்பலாக பதில்
அளித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam