பராமரிப்பு பணிகள் காரணமாக நாகர்கோவிலுக்கு பதிலாக கன்னியாகுமரியில் இருந்து ரெயில்கள் இயக்கம்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை, 07 ஜனவரி (ஹி.ச.) நாகர்கோவில் சந்திப்பில் பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை, நாகர்கோவில் சந்திப்புக்குப் பதிலாக கன்னியாகுமரி சந்திப்பு வரை ரெயில் சேவைகள் தற்காலிகமாக
பராமரிப்பு பணிகள் காரணமாக நாகர்கோவிலுக்கு பதிலாக கன்னியாகுமரியில் இருந்து ரெயில்கள் இயக்கம்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு


சென்னை, 07 ஜனவரி (ஹி.ச.)

நாகர்கோவில் சந்திப்பில் பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மறு அறிவிப்பு வரும் வரை, நாகர்கோவில் சந்திப்புக்குப் பதிலாக கன்னியாகுமரி சந்திப்பு வரை ரெயில் சேவைகள் தற்காலிகமாகத் தொடங்கி/முடிவடையும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 12667) வருகிற 8ம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலில் முடிவடையாமல், கன்னியாகுமாரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில், நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 12668) வருகிற 9ம் தேதி முதல் நாகர்கோவிலுக்கு பதிலாக கன்னியாகுமரியில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும்.

2. சென்னை சென்டிரலில் இருந்து நாகர்கோவில் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:12689 )வருகிற 9ம் தேதி முதல் சென்டிரலில் இருந்து நாகர்கோவிலில் முடிவடையாமல், கன்னியாகுமாரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில், நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்டிரல் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:12690 ) வருகிற 11ம் தேதி முதல் நாகர்கோவிலுக்கு பதிலாக கன்னியாகுமரியில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும்.

3. தாம்பரம் இருந்து நாகர்கோவில் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:12657) வருகிற 11ம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலில் முடிவடையாமல், கன்னியாகுமாரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில், நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:12658 ) வருகிற 12ம் தேதி முதல் நாகர்கோவிலுக்கு பதிலாக கன்னியாகுமரியில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும்.

இவ்வாறு தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b