வத்தலகுண்டு டாஸ்மார்க் கடையில் மோதல் இரண்டு பேர் காயம் - செண்டை மேளக் கலைஞர்கள் மூன்று பேர் கைது
திண்டுக்கல், 09 ஜனவரி (ஹி.ச) பழைய வத்தலகுண்டு கலைஞர் காலனி சேர்ந்த அழகுராஜா (25) மற்றும் செல்லதுரை (39) ஆகிய இருவரும் மதுபாட்டில் வாங்க நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்தார் செண்டை மேளம் கலைஞர்கள் சின்னமனூர் முனீஸ்வரன் (24) உசிலம்பட்டி சரவணன் (
கைது


திண்டுக்கல், 09 ஜனவரி (ஹி.ச)

பழைய வத்தலகுண்டு கலைஞர் காலனி சேர்ந்த அழகுராஜா (25) மற்றும் செல்லதுரை (39)

ஆகிய இருவரும் மதுபாட்டில் வாங்க நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்தார் செண்டை

மேளம் கலைஞர்கள் சின்னமனூர் முனீஸ்வரன் (24) உசிலம்பட்டி சரவணன் (24) கேரள மாநிலம் கோட்டயம் சங்கீத் (28) ஆகிய மூவரும் இவர்களை தள்ளிவிட்டு முண்டியடித்துக் கொண்டு மது பாட்டில் வாங்க முற்பட்டுள்ளனர்.

அப்போது இரண்டு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த செண்ட மேளக் கலைஞர்கள் காலி மதுபாட்டிகளை கொண்டு

அழகுராஜா மற்றும் செல்லத்துறையை சரிமாறியாக தாக்கி உள்ளனர்.

இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தால் அரசு மதுபான கடையில் பதட்டமான சூழ்நிலை

நிலவியது இதனைத் தொடர்ந்து காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்க பட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த வத்தலகுண்டு போலீசார் இளைஞர்களை தாக்கிய செண்டை மேளம்

கலைஞர்களை கைது செய்து நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில்

அடைத்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam