உயிரியல் விஞ்ஞானி ஹர் கோவிந்த் கொரானா!
சென்னை, 09 ஜனவரி (ஹி.ச.) மூலக்கூறு உயிரியல் விஞ்ஞானியான கொரானா 1922ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி பாகிஸ்தானில் பிறந்தார். இவர் 1959ஆம் ஆண்டு மனித உடலின் சில செயல்முறைகளுக்கு இன்றியமையாத இணைநொதி-ஏ என்ற வேதிப்பொருளை உற்பத்தி செய்தார். இது தொடர்பான ஆய
S


சென்னை, 09 ஜனவரி (ஹி.ச.)

மூலக்கூறு உயிரியல் விஞ்ஞானியான கொரானா 1922ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி பாகிஸ்தானில் பிறந்தார்.

இவர் 1959ஆம் ஆண்டு மனித உடலின் சில செயல்முறைகளுக்கு இன்றியமையாத இணைநொதி-ஏ என்ற வேதிப்பொருளை உற்பத்தி செய்தார்.

இது தொடர்பான ஆய்வு மூலம் மரபுவழியிலான சில நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று கண்டறியப்பட்டது.

இந்த ஆய்வுக்காக 1968ஆம் ஆண்டு இவருக்கும் நிரென்பர்க், ஹாலி ஆகிய இருவருக்கும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டது.

மேலும் மரபுக்குறியீடு எஸ்கிரிஷியா கோலி என்னும் நுண்ணுயிரிகளின் மரபணு உருவாக்கம் போன்ற ஆய்வுகளில் இவருடைய குழுவினரும் ஈடுபட்டனர்.

அதன்பின் இந்த நுண்ணுயிரியின், சுமார் 207 மரபணுக்களை இவர்கள் செயற்கையாக உருவாக்கினர்.

புரதத்தை செயற்கையாக உற்பத்தி செய்வதிலும் இவர் மகத்தான பங்காற்றியுள்ளார்.

முதன்முறையாக செயற்கை முறையில் மரபணுக்களை ஆய்வுக்கூடத்தில் உற்பத்தி செய்யப்பட்டது.

Hindusthan Samachar / Durai.J