Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 09 ஜனவரி (ஹி.ச.)
தூத்துக்குடியில் உங்க கனவை சொல்லுங்கள் என்ற திட்டத்தை தூத்துக்குடியில், எம்பி கனிமொழி
தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி
செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுகிறதா.. என்ற செய்தியாளர்கள்
கேள்விக்கு? இது மாதிரி ஆருடங்களுக்கு, உங்களுடைய எதிர்பார்ப்புக்கு நான்
பதில் சொல்ல முடியாது.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி இதுவரை எங்களோடு
இருக்கக்கூடிய அத்தனை கூட்டணி கட்சிகளும் இன்றும் இருக்கிறது.
புதிய கூட்டணி கட்சிகள் பேச்சு வார்த்தை நடத்துகிறார்களா என்ற செய்தியாளர்கள்
கேள்விக்கு? தமிழக முதல்வர் எடுக்க வேண்டிய முடிவு நான் பதில் சொல்ல
முடியாது.
காங்கிரஸ் எம்பிக்கள் விஜய்க்கு ஆதரவாக பேசி வருகிறார்களே என்ற செய்தியாளர்கள்
கேள்விக்கு? எந்த பதிலும் சொல்லாமல் கடந்து சென்று விட்டார்.
இந்த நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam