Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜனவரி (ஹி.ச.)
தமிழக வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர். ஆர். எஸ். ராஜகண்ணப்பன் 100 புதிய காப்பு வனங்கள் அறிவிக்கை செய்யப்பட்டதனை ஆவணப்படுத்தும் விதமாக நினைவுச் சிறப்புப் பதிப்பை வெளியிட்டார்.
இந்த நிகழ்வின்போது, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாகு. ஐ.ஏ.எஸ்., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனத்துறைத் தலைவர்) ஸ்ரீநிவாஸ் ஆர். ரெட்டி. ஐ.எப்.எஸ்.. முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக்காப்பாளர் ராகேஷ் குமார் டோக்ரா. ஐ.எப்.எஸ்., மற்றும் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான சிறப்புச் செயலாளர் அனுராக் எஸ். மிஸ்ரா. ஐ.எப்.எஸ். ஆகியோர் பங்கேற்றனர்.
காப்பு வனங்களின் விரிவாக்கமானது. ஒன்றோடொன்று தொடர்புடைய உயிரியல் பல்வகைப் பாதுகாப்பையும், காலநிலைச் செயல்பாடுகளையும் வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சட்டபூர்வமான இக்காப்பு வனங்கள் முக்கிய வன உயிரின வாழ்விடங்களை பாதுகாத்து, சற்றுசூழல் வழித்தடங்களை உறுதிப்படுத்தி. நீர்நிலைகளை பாதுகாக்கின்றன.
இதன் மூலம் கார்பன் சேமிப்பு அதிகரித்து, காலநிலை மாற்றத்திற்கெதிரான சூழலியல் தாங்குதன்மையும் மேம்படுகிறது. ஆகவே, நிரந்தர வனப் பாதுகாப்பு என்பது உயிரியல் பல்வகை பாதுகாப்பு, நீர்வள பாதுகாப்பு மற்றும் காலநிலை நிலைத்தன்மை ஆகியவற்றிற்கு ஒரே நேரத்தில் பங்களிக்கும் இயற்கை அடிப்படையிலான தீர்வாக விளங்குகிறது.
தீர்க்கமான, அறிவியல் அடிப்படையிலான மற்றும் சட்டப்பூர்வமாக வலுவான நடவடிக்கைகளின் மூலம். தமிழ்நாடு அரசு வனப் பாதுகாப்பில் தொடர்ந்து தலைமைத்துவனத்தை வெளிப்படுத்தி வருகிறது.
மேலும், காடுகளின் நிலையான வளர்ச்சி மற்றும் காலநிலை தாங்குதிறனை மக்களின் நீண்டகால நல்வாழ்வுக்கு அவசியமான ஒரு முக்கிய சுற்றுச்சூழல் உள்கட்டமைப்பாக நிருபித்து வருகிறது.
Hindusthan Samachar / vidya.b