Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 9 ஜனவரி (ஹி.ச.)
2025-ம் ஆண்டில் நாடு முழுவதும் 1 லட்சத்து 33 ஆயிரம் கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்.சி.பி.) தெரிவித்துள்ளது.
அத்துடன் 447 வழக்குகளில் 25 வெளிநாட்டினர் உள்பட 994 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 131 வழக்குகளில் 256 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த குற்றவாளிகளுக்கு மொத்தம் 3 கோடியே 30 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM