ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இராப்பத்து உற்சவம் -நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு!
திருச்சி, 09 ஜனவரி (ஹி.ச.) ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா துவங்கியது. இன்று முதல் அடுத்த பத்து நாட்கள் பகல் பத்து உற்சவம் நடந்தது. அடுத்து, ராப்பத்து உற்ச
ஸ்ரீரங்கம்


திருச்சி, 09 ஜனவரி (ஹி.ச.)

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி

திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா துவங்கியது.

இன்று முதல் அடுத்த பத்து நாட்கள் பகல் பத்து உற்சவம் நடந்தது. அடுத்து, ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளன்று, டிசம்பர் 30ஆம் தேதி பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

ராப்பத்து உற்ஸவத்தின், 10ம் நாளான நேற்று,

தீர்த்தவாரி நடைபெற்றது. பாண்டியன் கொண்டை, நீல் நாயக்க பதக்கம், வைர

அபயஹஸ்தம், தங்க பூணுால் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்தில்

இருந்து புறப்பட்ட நம்பெருமாள், சொர்க்கவாசலை கடந்து சந்திரபுஷ்கரணி வந்தார்.

பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, நம்பெருமாள் சந்திர

புஷ்க்கரணியில் தீர்த்தவாரி கண்டருளினார்.

பின், திருமாமணி மண்டபத்தில்

எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இரவு முழுவதும் திருமாமணி

மண்டபதில் எழுந்தருளிய நம்பெருமாள், இன்று நம்மாழ்வாருக்கு மோட்சம்

அளிப்பதுடன், வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவடைந்தது.

விழாவில் இன்று திருவாய்மொழித்திருநாள் சாற்றுமுறை நிறைவு சேவையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam