கிராமப்புறக் கழிவுகளை பயோ-சிஎன்ஜியாக மாற்றும் கோபர்தன் திட்டம் தொடக்கம்!
புதுடெல்லி, அக்டோபர் 01 (ஹி.ச.) கிராமப்புறங்களில் கிடைக்கும் கால்நடைக் கழிவுகள் மற்றும் மக்கும் தன்மை கொண்ட கரிமக் கழிவுகளை பயனுள்ள கம்பிரஸ்டு பயோகேஸ் (CBG) மற்றும் இயற்கை உரங்களாக மாற்றும் நோக்கில் கோபர்தன் திட்டம் வியாழக்கிழமை பாரத் மண்டபத்தில்
Manmogan sing


புதுடெல்லி, அக்டோபர் 01 (ஹி.ச.)

கிராமப்புறங்களில் கிடைக்கும் கால்நடைக் கழிவுகள் மற்றும் மக்கும் தன்மை கொண்ட கரிமக் கழிவுகளை பயனுள்ள கம்பிரஸ்டு பயோகேஸ் (CBG) மற்றும் இயற்கை உரங்களாக மாற்றும் நோக்கில் கோபர்தன் திட்டம் வியாழக்கிழமை பாரத் மண்டபத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி,

இந்தியாவில் உள்நாட்டு கம்பிரஸ்டு பயோகேஸ் உற்பத்தியை சுமார் பத்து மடங்கு அதிகரிப்பதே திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று தெரிவித்தார்.

ரஷ்யா-உக்ரைன் மோதல் மற்றும் ஹார்முஸ் நீரிணை தொடர்பான நெருக்கடி உள்ளிட்ட சர்வதேச எரிசக்தி நிலையற்ற சூழலில், உள்நாட்டிலேயே மாற்று எரிசக்தி வளங்களை உருவாக்குவது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

கால்நடை சாணம், விவசாயக் கழிவுகள் உள்ளிட்ட கரிமக் கழிவுகளை பயோகேஸ் மற்றும் இயற்கை உரங்களாக மாற்றுவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதுடன், புதைபடிவ எரிபொருட்களின் இறக்குமதியைச் சார்ந்திருப்பதையும் குறைக்க முடியும்.

கோபர்தன் திட்டத்தின் கீழ் தற்போது 217 கம்பிரஸ்டு பயோகேஸ் ஆலைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் அலோக் திரிபாதி தெரிவித்தார்.

இந்த ஆலைகள் மூலம் தினமும் சுமார் 0.4 மில்லியன் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர் தூய்மையான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.

மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத உதவி வழங்கப்பட உள்ளதாகவும்,ஒரு நாளைக்கு ஒரு டன் உற்பத்தித் திறனுக்கு ரூ.2 கோடி வரை நிதியுதவி வழங்கப்படும் எனவும் கூறினார்.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் gobardhan.eil.co.in இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்த பின்னர் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் பல்வேறு உதவிகள் மற்றும் சலுகைகளைப் பெற முடியும்.

கோபர்தன் திட்டத்தை கிராமம் தோறும் திறம்பட செயல்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு முக்கியப் பங்கு உள்ளது என்றும் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் நீரஜ் மிட்டல் தெரிவித்தார்.

Hindusthan Samachar / LOGESHWARI V