த.வெ.க அமோக வெற்றி பெறும் – துரை வைகோ நம்பிக்கை
கோவில்பட்டி, 01 அக்டோபர் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மதிமுக வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ கலந்து கொண்டு, உள்ளாட்சித் தேர்தல் பணிகள் ம
Durai vaiko


கோவில்பட்டி, 01 அக்டோபர் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மதிமுக வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ கலந்து கொண்டு, உள்ளாட்சித் தேர்தல் பணிகள் மற்றும் கட்சியினர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ,

உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தின் போது

பேசியதாக கூறப்படும் வார்த்தைகள் குறித்து விமர்சனம் தெரிவித்தார்.

அரசியல் தலைவர்கள் கண்ணியமான முறையில் கருத்தியல் அடிப்படையில் கருத்துகளை முன்வைக்க வேண்டும் என்றும், தலைவர்கள் தங்களது தொண்டர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும், தமிழக வெற்றிக் கழகத்துடன் மதிமுக இணைந்து செயல்படுவதன் காரணம் குறித்தும் அவர் விளக்கம் அளித்தார்.

தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதே தங்களது நோக்கம் என்றும், லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத நிர்வாகம் வழங்கப்பட வேண்டும் என்பதில் மதிமுக உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல்கள் குறித்து பேசிய துரை வைகோ, திமுக மற்றும் அதிமுக இடையே ஏற்பட்டதாக தாம் கூறும் அரசியல் சூழ்நிலையின் காரணமாகவே இடைத்தேர்தல் ஏற்பட்டதாக குற்றம்சாட்டினார்.

மேலும், இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். தவெக மற்றும் மதிமுக இணைந்து செயல்படுவது குறித்து, இரு கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படும் எனவும் அவர் கூறினார்.

ஜெம் வீரமணி தொடர்பான வழக்கு குறித்தும் துரை வைகோ கருத்து தெரிவித்தார். இந்த விவகாரத்தில் விசாரணை தீவிரமாக நடைபெற வேண்டும் என்றும், குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த வழக்கு தொடர்பாக துரை வைகோ முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன.

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாகவும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார். பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறிய அவர், இதேபோல் பட்டினப்பாக்கம் விவகாரத்திலும் மக்கள் நலனுக்கு ஏற்ற முடிவு எடுக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், மதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்றும், தமிழக மக்களின் நலனுக்கான தங்களது அரசியல் பயணம் தொடர்ந்து நடைபெறும் என்றும் துரை வைகோ தெரிவித்தார்.

Hindusthan Samachar / LOGESHWARI V