Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 01 அக்டோபர் (ஹி.ச.)
பொதுத்துறை வங்கிகளின் பணி நாட்கள் மற்றும் விடுமுறை தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் ஒரு சுற்றறிக்கை பரவி வருகிறது.
இந்த சுற்றறிக்கை மத்திய அரசால் வெளியிடப்பட்டதாக கூறப்பட்டு வருவதால், வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த சுற்றறிக்கை போலியானது என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடேசன் விளக்கம் அளித்துள்ளார்.
அனைத்து சனிக்கிழமைகளையும் பொதுத்துறை வங்கிகளுக்கு விடுமுறையாக அறிவித்து மத்திய அரசு எந்தவொரு புதிய உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
வங்கி விடுமுறை தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்களை மட்டும் நம்பி வாடிக்கையாளர்கள் முடிவெடுக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக வங்கி விடுமுறை தொடர்பான அறிவிப்புகள் ரிசர்வ் வங்கி மற்றும் சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகங்களின் அதிகாரப்பூர்வ தகவல்களின் அடிப்படையில் உறுதி செய்யப்படுகின்றன.
எனவே, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவும் சுற்றறிக்கைகள் மற்றும் தகவல்களின் உண்மைத்தன்மையை சரிபார்த்த பின்னரே அவற்றை நம்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அனைத்து சனிக்கிழமைகளும் பொதுத்துறை வங்கிகளுக்கு விடுமுறை என தற்போது பரவி வரும் தகவல் குறித்து பொதுமக்கள் மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V