அக்டோபர் 7 உலக பருத்தி தினத்தை நினைவு கூறும் வகையில் ஐக்கிய நாடுகளின் சபையில் பேசிய இந்திய ராஜ்யசபா எம்பி எல்.கே சுதீஷ்
சென்னை, 10 அக்டோபர் (ஹி.ச.) உலக பருத்தி தினத்தை முன்னிட்டு நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வை இந்தியா மற்றும் மாலியின் தூதரகங்கள் இணைந்து நடத்தியது, இதில் உலக அளவில் பருத்தியின் மதிப்பு கூட்டல
க


சென்னை, 10 அக்டோபர் (ஹி.ச.)

உலக பருத்தி தினத்தை முன்னிட்டு நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வை இந்தியா மற்றும் மாலியின் தூதரகங்கள் இணைந்து நடத்தியது, இதில் உலக அளவில் பருத்தியின் மதிப்பு கூட்டல் அதனால் மக்களின் வாழ்வாதாரங்கள் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது.

இதில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளும் கலந்து கொண்டது.

அதில் பேசிய ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய நிரந்தர பிரதிநிதியான தூதர் ஹரிஷ் பார்வதனேனி மகாத்மா காந்தியின் கதர் ஆடை பற்றியும் சுதந்திரம் பற்றியும் விரிவாக பேசினார்

அதனைத் தொடர்ந்து பேசிய மாலியின் நிரந்தர பிரதிநிதியான தூதர் இசா கோன்ஃபோரு மாலியின் பொருளாதாரம் மற்றும் கிராமப்புற வாழ்வாதாரர்களுக்கு பருத்தி முக்கியத்துவம் எவ்வாறு உதவுகிறது என்று பேசினார்

அதனைத் தொடர்ந்து பேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் அசித் குமார் மால்,

மேற்கு வங்காளத்தில் பாரம்பரிய கைவினை திறன் கலைஞர்கள் பருத்தி எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் அதன்மூலம் அவர்களுக்கு நியாயமான ஊதியம் தொழில் முன்னேற்றத்திற்கான கடன் அரசின் ஆதரவு ஆகியவற்றை பற்றி எடுத்துரைத்தார்.

அதனை தொடர்ந்து பேசிய தமிழக ராஜ்யசபா எம்பி எல்.கே சுதீஷ்,

பருத்திப் பின்னல் ஆடைகள் மற்றும் ஆடை உற்பத்தியில் தமிழகத்தின் அனுபவத்தை எடுத்துரைத்தார்

மேலும் பிரதமர் மித்ரா முன்முயற்சியின் கீழ் உருவாக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா மற்றும் ஜவுளி பதப்படுத்துதல் பற்றி விளக்கம் அளித்தவர் பதப்படுத்துதல் என்பது ஏற்படும் கழிவுகளை எவ்வாறு மறுசுழற்சி செய்ய வேண்டும் என்பதை பற்றி விளக்கம் அளித்தார்

Hindusthan Samachar / Durai.J