CJP தலைவர் அபிஜித் தீப்கே டெல்லி விமான நிலையத்தில் கைது
புதுடெல்லி, 10 அக்டோபர் (ஹி.ச.) டெல்லியில் நடைபெறும் போராட்டம், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கைக்கு எதிராகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும் நடத்தப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் இருந்து சு
Del


புதுடெல்லி, 10 அக்டோபர் (ஹி.ச.)

டெல்லியில் நடைபெறும் போராட்டம், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கைக்கு எதிராகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும் நடத்தப்படுகிறது.

வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 13.30 கோடி பெயர்கள் நீக்கப்பட்டதாகக் கூறி, அவற்றை மீண்டும் சேர்க்க வேண்டும் என்றும், தேர்தல் நடைமுறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அதில் கலந்துகொள்வதற்காக அபிஜித் தீப்கே மும்பையில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்துள்ளார்.

விமானம் டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்ததும், அவரை போலீசார் விமானத்திற்குள்ளேயே வைத்து கைது செய்ததாகக் கூறப்படுகிறது.

Hindusthan Samachar / LOGESHWARI V