மகாளய அமாவாசை - கோவில்களில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
தேனி, 10 அக்டோபர் (ஹி.ச.) இந்து சமய மரபில் அமாவாசை தினம் முன்னோர்களை நினைத்து வழிபடுவதற்கான முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் முன்னோர்களுக்குத் திதி கொடுத்தல், தர்ப்பணம் செய்தல் உள்ளிட்ட வழிபாடுகளை மேற்கொள்வது அவர்களின் ஆசியைப் பெற்
Amavasai


தேனி, 10 அக்டோபர் (ஹி.ச.)

இந்து சமய மரபில் அமாவாசை தினம் முன்னோர்களை நினைத்து வழிபடுவதற்கான முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது.

இந்த நாளில் முன்னோர்களுக்குத் திதி கொடுத்தல், தர்ப்பணம் செய்தல் உள்ளிட்ட வழிபாடுகளை மேற்கொள்வது அவர்களின் ஆசியைப் பெற்றுத் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும், புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது.

இந்நிலையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் வருகை அதிகரித்தது.

அக்னி தீர்த்தக் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தொடர்ந்து ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தேனி மாவட்டத்தில் சுற்றுலாத் தலமாக விளங்கும் சுருளி அருவியிலும் மகாளய அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர். அங்கு புனித நீராடிய அவர்கள், முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

இதேபோல், வீரபாண்டி பகுதியில் முல்லைப் பெரியாற்றின் கரையோர நீர்நிலைகளிலும் ஏராளமானோர் திரண்டனர்.

புனித நீராடிய பின்னர், முன்னோர்களுக்காக எள்ளுப் பிண்டம் உள்ளிட்ட படையல்களை வைத்து பாரம்பரிய முறைப்படி தர்ப்பணம் செய்தனர்.

மகாளய அமாவாசையை முன்னிட்டு முக்கிய வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் வருகை அதிகரித்ததால், பல்வேறு பகுதிகளிலும் ஆன்மிகச் சூழல் நிலவியது.

Hindusthan Samachar / LOGESHWARI V